2025 ஜூலை 17, வியாழக்கிழமை

புத்தளம் நகரசபை ஊழியர்களுக்கு சீருடைகள் வழங்கிவைப்பு

Gavitha   / 2015 ஏப்ரல் 08 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் நகரசபையில் வௌ;வேறு பிரிவுகளில் சேவையாற்றும் ஊழியர்களுக்கு வௌ;வேறு நிறங்களிலான சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட்டு  கையளிக்கப்பட்டுள்ளன.

புத்தளம் நகரசபையின் வேலைத்தளத்தில் செவ்வாய்க்கிழமை (07) காலை இந்த சீருடைகள் வழங்கி வைக்கப்பட்டன.
சுகாதார பிரிவு ஊழியர்களுக்கு இளம்பச்சை நிற சீருடையும் கள  வேலை பிரிவு ஊழியர்களுக்கு செம்மஞ்சள் நிற சீருடையும் வழங்கி வைக்கப்பட்டன.

புத்தளம் நகரசபை உறுப்பினர் எம்.ஏ.எம். சதூர்டீன், முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.எம். ரபீக்,  நகர சபையின் சுகாதார பரிசோதகர் எம்.சுரேஷ் ஆகியோர் இந்த சீருடைகளை வழங்கி வைத்தனர்.

சீருடைகளை ஊழியர்கள் பெற்றுக்கொண்டதை தொடர்ந்து அவர்களின் வேலைகளை புத்தளம் நகர முதல்வரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளருமான கே.ஏ. பாயிஸ் புத்தளம்-கொழும்பு முகத்திடலில் வைத்து ஆரம்பித்து வைத்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X