2025 மே 08, வியாழக்கிழமை

முன்னாள் ஜனாதிபதி புத்தளத்துக்கு விஜயம்

Kogilavani   / 2015 ஏப்ரல் 23 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ நேற்று புதன்கிழமை(22) புத்தளம் மாவட்டத்தில் இடம்பெற்ற சர்வமத வழிபாடுகளில் கலந்துகொண்டார்.

வடமேல் மாகாண சபை உறுப்பினர் யூ.கே.டீ.பாலித ரோஹன தலைமையில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன.

பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிலாபம் நகருக்கு விஜயம் செய்தார். வடமேல் மாகாண அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா தலைமையில் சிலாபம் மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயத்தில் இடம்பெற்ற மதவழிபாட்டில் அவர் கலந்துகொண்டார்.

அதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி தும்மலதெனிய ஸ்ரீ சுமனாராம விகாரையில் இடம்பெற்ற நிகழ்வுகளிலும் மாலை 5 மணியளவில் ஆனமடு பரமாகந்த ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற நிகழ்வுகளிலும் அவர் கலந்துகொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X