2026 பெப்ரவரி 02, திங்கட்கிழமை

நீர்கொழும்பு மாணவர்களுக்கு ஏப்ரல் மாத நிதிக்கொடுப்பனவு

Gavitha   / 2015 ஏப்ரல் 28 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் வைர விழாவை முன்னிட்டு கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற நெய்தல் இலக்கிய  ஆவணத்தொகுப்பு நூலின் வெளியீட்டிலிருந்து கிடைக்கப்பட்ட நிதியிலிருந்து, குறித்த கல்லூரியில் தந்தையை இழந்த 6 வறிய தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு புலமைப்பரிசில் வழங்கப்பட்டு வருகிறது.

ஒரு மாணவருக்கு மாதம் 1200 ரூபாய் வீதம் இந்த புலமைப்பரிசு வழங்கப்படுகிறது. இம்மாதக் கொடுப்பனவு திங்கட்கிழமை (27) கல்லூரி அதிபர் ந.புவனேஸ்வரராஜா முன்னிலையில் வழங்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .