Thipaan / 2015 மே 23 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம். எஸ். முஸப்பிர்
சிலாபம் கரவிடாகார பிரதேசத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலத்தை இன்று சனிக்கிழமை காலை மீட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
சிலாபம் கரவிடாகார குளத்துக்கு செல்லும் கால்வாயிலிருந்தே இச்சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சடலம் கரவிடாகார மேற்கு பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலத்துக்கு அருகில் உயிரிழந்த நபர் பயணித்த சைக்கிளும் காணப்பட்டுள்ளதோடு, அவரது தலையில் காயம் ஒன்றும் உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இவர் கொலை செய்யப்பட்டுள்ளாரா என்பது தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
18 minute ago
29 minute ago
47 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
29 minute ago
47 minute ago
52 minute ago