2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

சட்டவிரோதமாக ஆடுகளை ஏற்றிச்சென்ற இருவர் கைது

Thipaan   / 2015 ஜூன் 30 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்

சட்டவிரோதமாக, ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகளை லொறி ஒன்றில் ஏற்றிச் சென்ற இருவரை கைது செய்ததுடன் லொறியையும் கைப்பற்றியுள்ளதாக கருவலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.
 
திங்கட்கிழமை(29) இரவு கருவலகஸ்வெவ தப்போவ பிரதேசத்தில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த 38 மற்றும் 48 வயதுகளையுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் கைப்பற்றிய லொறியினுள் 74 ஆடுகளும் 46 செம்மறி ஆடுகளும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் கைப்பற்றப்பட்ட லொறியையும் புத்தளம் நீதிமன்றத்தில், ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கருவலகஸ்வெவ பொலிஸார்மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X