Suganthini Ratnam / 2015 ஜூலை 01 , மு.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.முஸப்பிர்
முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரத்மல்கஸ்வௌ பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இரு தரப்பினருக்கு இடையில் இடம்பெற்ற கைகலப்பில் காயமடைந்த ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
மஹக்கும்புக்கடவள விஜயபுர பிரதேசத்தை சேர்ந்த மூவர் முச்சக்கரவண்டியொன்றில் ரத்மல்கஸ்செச பிரதேசத்திலுள்ள வீடொன்றினுள் பலவந்தமாக நுழைய முற்பட்டுள்ளனர். அவர்களை தடுக்க அவ்வீட்டிலுள்ளோர் முனைந்தபோது, இரு தரப்பினருக்கும் இடையில் கைகலப்பு இடம்பெற்றது. அயலவர்களும் வீட்டினுள் நுழைய முற்பட்டவர்களை தாக்கியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைகலப்பின்போது காயமடைந்தவர்கள் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சிலாபம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago