Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Thipaan / 2015 ஜூலை 02 , மு.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம்.சனூன்
க.பொ.த சாதாரண தர பரீட்சையின் பின்னர் பாடசாலையை விட்டு இடைவிலகும் மாணவர்களை வளமான எதிர்காலமொன்றை நோக்கி பயணிக்க வைக்கும் நோக்கத்தோடு அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப பயிற்சி நெறிக்கான புத்தளம் நிலையத்தின் திறப்பு விழா புதன்கிழமை (01) மாலை இடம்பெற்றது.
புத்தளம் சேர்விஸ் வீதியில் அமையப்பெற்றுள்ள இந்த தொழில்நுட்ப பயிற்சி நெறிக்கான நிலையத்தை முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப் பிரதம அதிதியாககலந்து கொண்டு திறந்து வைத்தார்.
இந்நிகழ்வு, இன்ஸைட் இன்ஸ்டிடியூட் ஒப் மனேஜ்மென்ட் நிறுவனத்தினால் நடாத்தப்படும் இந்த தொழில்நுட்ப பயிற்சி பயிற்சி நிலையத்தின் பணிப்பாளர் எஸ்.எம்.எம். ரிபாய் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இன்ஸைட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹில்மி சுலைமான், இன்ஸைட் நிறுவனத்தின் ஆளுநரும், ரெயின்கோ நிறுவனத்தின் தவிசாளருமான பௌஸ் ஹாஜி, முன்னாள் வடமேல் மாகாண அமைச்சர் எம்.எச்.எம். நவவி, புத்தளம் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம். மலிக், புத்தளம் வலய கல்வி பணிமனையின் தமிழ் பிரிவுக்கான பிரதிக்கல்வி பணிப்பாளர் இசட்.ஏ. சன்ஹீர் உள்ளிட்ட அதிபர்கள், உலமாக்கள், ஆசிரியர்கள், புத்தி ஜீவிகள், பெற்றார்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
தொழில் நுட்ப பயிற்சி நிலையத்தை திறந்து வைத்த அதிதிகள் நிலையத்தின் பல்வேறு பயிற்சி பிரிவுகளையும் பார்வையிட்டனர்.
இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்நிகழ்வில் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு மற்றும் இராப்போசனம் என்பனவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இன்ஸைட் இன்ஸ்டிடியூட் ஒப் மனேஜ்மென்ட் நிறுவனம் தொடர்பான விவரண படமும் இங்கு காண்பிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago