2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

விபத்தில் ஒருவர் மரணம்; மூவர் காயம்

Suganthini Ratnam   / 2015 ஜூலை 02 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

புத்தளம் -மன்னார் வீதியின் 8ஆம் கட்டை பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை இரவு பயணித்த முச்சக்கரவண்டியொன்று வீதியை விலகிச் சென்று  மரமொன்றுடன் மோதியதால், பெண்ணொருவர் மரணமடைந்ததுடன், மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் மரண வீட்டுக்கு சென்றுவிட்டு முச்சக்கரவண்டியில் திரும்பிக்கொண்டிருந்தபோதே இந்த விபத்துக்கு முகங்கொடுத்தார்கள்.

இதில் காயமடைந்த சிறுமியொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றார். ஏனைய இருவரும் புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றனர் என்றும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X