Suganthini Ratnam / 2015 ஜூலை 06 , மு.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.முஸப்பிர்
மாரவில, மூதுகட்டுவ பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ள விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் காரை செலுத்தி சென்ற மாதம்பை, முகுனுவட்டவான் பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய தந்தை மரணமடைந்துள்ள அதேவேளை, இவரது மனைவியும் மகளும் காயமடைந்த நிலையில் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிலாபத்திலிருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த லொறியும் எதிர்த்திசையிலிருந்து பயணித்துக்கொண்டிருந்த காரும் நேருக்குநேர் மோதி இவ்விபத்து சம்பவித்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
மேற்படி லொறியுடன் அதன் சாரதி மாரவில பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
8 minute ago
16 minute ago
21 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
16 minute ago
21 minute ago
21 minute ago