2025 மே 07, புதன்கிழமை

சிறுமியை துஷ்பிரயோகப்படுத்தியவர் கைது

Thipaan   / 2015 ஜூலை 07 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

14 வயது சிறுமியொருவரை கடத்திச்சென்று துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் நபர் ஒருவர்  திங்கட்கிழமை இரவு கைது செய்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

முந்தல், 60 ஏக்கர் பிரதேசத்திலேயே சிறுமியும் சந்தேகநபரும் வசித்து வந்ததுடன் இருவருக்குமிடையில் காதல் தொடர்பும் ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில், குறித்த சிறுமியை அவரது பெற்றோரின் அனுமதியின்றி சந்தேக நபர் அழைத்துச்சென்றுள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை(05) முந்தல் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதனையடுத்து, முந்தல் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் சிலாபம், முதுபந்தி பிரதேசத்தின் வீடொன்றிலிருந்த சந்தேகநபரை கைது செய்ததுடன் குறித்த சிறுமியினையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X