Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Thipaan / 2015 ஜூலை 12 , மு.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இஸட். ஷாஜஹான்
எமது முப்படைப் பிரிவுகளும் சர்வதேசம் ஏற்றுக் கொண்ட கௌரவமும் பெருமையும் கொண்டவை. எமது படைப்பிரிவுகளுக்கு சர்வதேச ரீதியில் கிடைத்த அங்கிகாரமானது நாட்டுக்குக் கிடைத்த கௌரவமாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கட்டுநாயக்க விமானப் படைத்தளத்தற்கு வெள்ளிக்கிழமை (10) மாலை ஜனாதிபதி விஜயம் செய்து பார்வையிட்ட பின்னர் 5,000 விமானப் படை வீரர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் பஸ்நாயக்க, விமானப் படைத்தளபதி கங்கன புளத் சிங்கள உட்பட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
தேசிய பாதுகாப்புக்கு விமானப்படையினர் உயரிய பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.
பயங்கரவாதிகளுடனான யுத்தத்தின் போது விமானப் படையினர் அளப்பரிய சேவை புரிந்துள்ளனர். நாட்டுக்காக தியாகங்கள் புரிந்துள்ளனர்.
நவீன தொழில்நுட்ப பயன்பாட்டுடன் இணைந்ததாக விமானப் படைப்பிரிவு உள்ளது. படை வீரர்களான உங்களது அனுபவம் மற்றும் சேவைகளை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் கௌரவிக்கும் வகையிலும்; வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்படும்.
யுத்தத்தின் போது விமானப் படைவீரர்கள் உயிர் நீத்ததை நாங்கள் மறக்க முடியாது. பலர் உடல் ஊனமுற்றுள்ளனர். விமானப் படையினரான நீங்கள் இயற்கை அனர்த்தங்களின் போது எமது நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஆற்றிய, ஆற்றிவருகின்ற சேவைகளையும் நாங்கள் மறக்க முடியாது.
கடந்த சல மாதங்களாக உலகத் தலைவர்களுடனான எனது சந்திப்புக்களின் போது முப்படையினருக்கு வழங்க வேண்டிய தொழில்நுட்ப மற்றும் பயிற்சிகள் தொடர்பாக எடுத்துக் கூறியுள்ளேன்.
எதிர்காலத்தில் உங்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஜனாதிபதியின் உரையின் பின்னர் விமானப் படைத்தளபதி ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னம் ஒன்றை பரிசளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago