2025 மே 07, புதன்கிழமை

டிப்பன்டர் ரக வாகனம் மோதி இருவர் உயிரிழப்பு

Princiya Dixci   / 2015 ஜூலை 12 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்

திவுலபிட்டிய பிரதேச சபையின் முன்னாள் தலைவரின் டிப்பன்டர் ரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக, கட்டானை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம், கதிரானை சந்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

மோட்டார் சைக்கிளில் பயணித்த, மீரிகம பிரதேசத்தைச் சேர்ந்த தேவபக்சகே நிஹால் விஜித்த (55 வயது), மினுவாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த விஜயதுங்க கமராலலாகே லஹிரு சத்துரங்க (24 வயது) ஆகியோரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திவுலபிட்டியிலிருந்து நீர்கொழும்பை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த திவுலபிட்டிய பிரதேச சபையின் முன்னாள் தலைவரின் டிப்பன்டர் ரக வாகனத்துடன்  கதிரானையிலிருந்து ருக்கத்தல்ல நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், கதிரானை சந்தியில் வைத்து  நேருக்கு நேர் மோதியுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் இருவரின் சடலங்களும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

டிப்பன்டர் ரக வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ள கட்டானை பொலிஸார், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X