Thipaan / 2015 ஜூலை 13 , மு.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-முஹம்மது முஸப்பிர்
மாராவில குறூஸ் தேவால பிரதேசத்திலுள்ள கடலில் குளிக்கச் சென்றபோது இளைஞர் ஒருவர் (19 வயது) கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக மாராவில பொலிஸார் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக் கிழமை (12) மாலை இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் கெப்பட்டிவலான பிரதேசத்தைச் சேர்ந்த சரின் கயான் (வயது 19) எனும் இளைஞரே காணாமல் போயுள்ளார்.
சுற்றுலா நிமித்தம், மாராவில பிரதேசத்துக்கு வந்துள்ள நிட்டம்புவ தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் மாராவில கடற்கரைப் பிரதேசத்துக்கு சென்றுள்ளனர்.
குறித்த குழுவினர், அங்கு மதுபானம் அருந்தியுள்ளதோடு அவர்களுள் சிலர் கடலில் குளிக்கச் சென்ற வேளையிலேயே இவ்விளைஞர் கடலில் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அப்பிரதேச கடற்றொழிலாளர்கள் காணாமல் போன இளைஞரைத் தேடும் பணிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் கடலில் தேடுதல் நடாத்திய போதும் காணாமல் போன இளைஞரின் உடல் கிடைக்கவில்லை எனத் தெரிவித்த மாராவில பொலிஸார், தொடர்ந்தும் தேடுதல் பணி முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்திலுள்ள கடலில் குளிப்பது ஆபத்தானது எனத் தெரிவிக்கும் பதாதைகள் அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தினால் அப்பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago