Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Thipaan / 2015 ஜூலை 13 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.என்.எம். ஹிஜாஸ், முஹம்மது முஸப்பிர்
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக பதிவு செய்யப்பட்ட 12 கட்சிகளும் 15 சுயேட்சை குழுக்களும் வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தன.
இன்றைய வேட்புமனுத்தாக்கலினை முன்னிட்டு புத்தளம் நகரில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்ததுடன் அதிகளவான பொலிசாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுப்பட்டிருந்தனர்.
புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள், திங்கட்கிழமை(13) புத்தளம் மாவட்ட தேர்தல் தெரிவு அத்தாட்சி அலுவலகத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.
ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, பொதுபல சேனா உள்ளிட்ட கட்சிகளும், சுயேட்சை குழுக்களுமே வேட்புமனுத்தாக்கல் செய்தன.
எதிர்வரும் நாடளுமன்ற தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் எம்.என்.எம். நஸ்மி. எம்.எச்.எம் நவாவி, ஏ.எச். பைறுஸ், வி. கமலன் கந்தன் ஆகிய நான்கு சிறுபான்மை இனத்தவர்கள் போட்டியிடுகின்றனர்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் எஸ்.எச்.எம். முஸம்மில் மற்றும் ஜே.வி.பி சார்பில் மொஹம்மது மொஹிடீன் ஆகியோர் சிறுபான்மை மக்கள் சார்பில்போட்டியிடுகின்றனர்.
முன்னாள் புத்தளம் நகர சபைத்தலைவர் கே.ஏ. பாயிஸ், முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியா , முன்னாள் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஏ.எம். இன்பாஸ் உள்ளிட்ட குழுவினர் ஓய்வு பெற்ற மாவட்ட பொறியியலாளர் பி.ஐ.எம். ஜிப்ரி தலைமைலான சுயேட்சை குழுவில் போட்டியிடுகின்றனர்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களினை கட்சிகளும், சுயேட்சை குழுக்களும் புத்தளம் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியிடம் கையளித்துள்ளன.
ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர்கள்
1. நிரோஷன் பெரேரா (தலைமை வேட்பாளர்)
2. பாலித ரங்கே பண்டார
3. சாந்த சிசிர குமார
4. தென் ஹெக்டர் அப்புஹாமி
5. அசோக வடிவமங்காவ
6. அசோக பிரியந்த
7. எம். என். எம். நஸ்மி
8. ஹிலரி பிரசன்ன பெர்னாண்டோ
9. எம். எச். எம். நவாவி
10. ஏ.எச். பைறூஸ்
11. வைரய்யா கமலன் கண்ணன்
புத்தளம் மாவட்ட அரசியல் விழிப்புணர்வு மன்றத்தின் சார்பில் சுயேட்சையாகப் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரம்.
1. பீ. ஐ. எம். ஜிப்ரி (ஓய்வு பெற்ற மாவட்ட பொறியியலாளர்)
2. அபூபக்கர் முஹம்மது இன்பாஸ் (கல்பிட்டி)
3. எம். எச். எம். இப்திகார் (கணமூலை)
4. எம். வை. எம். உவைஸ் (ரத்மல்யாய)
5. எஸ். ஏ. எஹியா (முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர்)
6. கே. ஏ. பாயிஸ் (முன்னாள் புத்தளம் நகர சபை தலைவர்)
7. எம். எம். ஹூசைனுதீன் (கல்பிட்டி)
8. சம்சுதீன் நவாஸ்தீன் ( சிலாபம்)
9. ஏ. எல். எம். லாபிர் (கொட்டாரமுல்ல)
10. என். கதிரமலை நாகராஜா (புத்தளம்)
11. ஏ. ஓ. அப்துல் நஜீப் (நில அளவையாளர்)
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
1. மில்ரோய் பெர்ணான்டோ (தலைமை வேட்பாளர்)
2. பிரியங்கர ஜயரட்ண
3. அருண்திக பெர்ணாண்டோ
4. எண்டனி விக்டர் பெரேரா
5. தயாசிரித திசேரா
6. நியோமால் பெரேரா
7. சனத் நிசாந்த பெரேரா
8. சிந்தக அமல் மாயாதுன்ன
9. எஸ். எச். எம். முஸம்மில்
10. ஜகத் பிரியங்கர
11. இந்திராணி தசநாயக்கா
மக்கள் விடுதலை முன்னணி
1. சமந்த கோரள ஆராச்சி
2. அஜித் ஜிஹான் பெர்னாண்டோ
3. ஏ. எச். எம். பியசேன
4. முஹம்மது மொஹிதீன்
5. நிமல் பத்திரன
6. பாலித் சோமரத்ன
7. பாலித ஸ்ரீ விஜேசிங்க
8. விஜித் பிரியந்த ரத்நாயக்கா
9. பீ. எல். விஜேதாச
10. சாகர குமார விஜேசேகர
11. எமல் பெரேரா
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago