Princiya Dixci / 2015 ஜூலை 17 , மு.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அநுராதபுரம் மாவட்டத்தில் 16 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அங்கிகரிக்கப்பட்ட ஐந்து அரசியல் கட்சிகளிலிருந்தும் மூன்று சுயேச்சை குழுக்களிலிருந்தும் இவர்கள் போட்டியிடுகின்றனர்.
இதேவேளை, 810,082 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களை இரத்தினபுரி மாவட்டம் கொண்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் சுனில் கன்னங்கர தெரிவித்தார்.
இதன்படி எஹெலியகொட பிரதேசத்தில் 96,170 வாக்காளர்களும் இரத்தினபுரியில் 121,108 வாக்காளர்களும், பெல்மடுல்ல பிரதேசத்தில் 83,934 வாக்காளர்களும், நிவித்திகலையில் 96,156 வாக்காளர்களும், இறக்வாணையில் 102,618 வாக்காளர்களும் கொலொன்னயில் 140,748 வாக்காளர்களும் கலவானை பிரதேசத்தில் 62,773 வாக்காளர்களும் பலாங்கொடை பிரதேசத்தில் 106,575 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
196 நாடாளுமன்ற உறுப்பினர்களில் இந்த மாவட்டத்திலிருந்து 11 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இம் மாவட்டத்தில் 624 வாக்களிப்பு நிலயங்களை அமைக்க ஏற்கெனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இரத்தினபுரி சிரேஷ்ட பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.ஏ.பி.சி. பேரேரா தெரிவித்தார்.
1 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago