Princiya Dixci / 2015 ஜூலை 17 , மு.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

- ஹிரான் பியங்கர ஜயசிங்க
புத்தளம், சேதபோல பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் கடத்திய ஜவரை புத்தளம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், புதன்கிழமை (15) கைது செய்துள்ளனர் என புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த மூவரும் சாரதிகள் இருவம் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மணல் அகழ்வுக்குப் பயன்படுத்திய ட்ரக்டர் மற்றும் முச்சக்கரவண்டி ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த நபர்கள், அரசாங்கத்துக்கு சொந்தமான இடத்தில் பெகோப் ரக இயந்திரத்தைப் பயன்படுத்தி சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்த சோதனை நடவடிக்கையின்போது, 50 கசிப்பு போத்தல்களை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
விசேட அதிரடிப்படையின் 15 பேர் கொண்ட குழுவினரே இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
1 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago