Princiya Dixci / 2015 ஜூலை 17 , மு.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்
புத்தளம் தள வைத்தியசாலையின் தாதியர்கள், இன்று வெள்ளிக்கிழமை (17) பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
வருடாந்தம் தாதியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இடமாற்றத்தின் போது புத்தளம் தள வைத்தியசாலையின் தாதிமார்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தே இப்பகிஸ்கரிப்பு நடைபெறுகின்றது.
புத்தளம் தள வைத்தியசாலையில் பிற மாவட்டங்களினைச் சேர்ந்த தாதியர்கள் 5 - 20 வருடங்கள் வரை கடமையாற்றி வருவதாகவும் வருடாந்த இடமாற்றத்தின் போது இவர்களுக்கு இதுவரை இடமாற்றம் வழங்கப்படவில்லை எனவும் அகில இலங்கை தாதியர் சங்கத்தின் புத்தளம் தலைவர் அமில ரத்நாயக்க தெரிவித்தார்.
எனினும், அவசர தேவைகளின் போது தாதியர் சேவையில் ஈடுபடுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

5 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago