2025 மே 07, புதன்கிழமை

விபத்தில் குடும்பஸ்தர் பலி

Thipaan   / 2015 ஜூலை 19 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மதுரங்குளி தொடுவா வீதியில் சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர்  உயிரிழந்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில், மதுரங்குளி கணமூலை பிரதேசத்தைச் சேர்ந்த முஹம்மது ஹனிபா அப்துல் பரீது (வயது 49) எனும் நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

குறித்த நபர், மதுரங்குளி நகரிலிருந்து தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின் கம்பத்துடன் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.  

விபத்து இடம்பெற்று சிறிது நேரத்தில் அவ்விடத்துக்கு வந்தவர்கள், படுகாயமடைந்தவரை புத்தளம் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்துள்ள போதும் அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த பொலிஸார், இவ்விபத்து தொடர்பில்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X