2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

இருவர் வெட்டிக்கொலை

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 16 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி மாவட்டம், நெலுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லேல்வல சந்தியில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) அதிகாலை நபரொருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக நெலுவ பொலிஸார் தெரிவித்தனர்.

63 வயதான சந்துதாச சிறிபால என்பவரே இவ்வாறு இனந்தெரியாத நபரினால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். 

உயிரிழந்த நபர், சனிக்கிழமை (15) நண்பரொருவரின் வீட்டுக்குச் சென்று விட்டு திரும்பி வருகையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த நெலுவ பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இதேவேளை, மிரிகான, எபுல் தெணிய பகுதியில் சனிக்கிழமை (15) இரவு 8.30 மணியளவில் வீடொன்றில் வைத்து நபரொருவரை வெட்டிக்கொலை செய்துவிட்டு கொலையாளி தப்பி ஓடியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். 

47 வயதுடைய ஹபடாகே ஜோன் நிசாந்த விபிதானந்த என்பவரே இதன்போது உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்த நபரின் மனைவியின் தமையனாலேயே இவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் குடும்ப பகையே இக்கொலைக்கு காரணமெனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

கொலையாளியை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X