2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

வாக்குச் சீட்டை புகைப்படம் எடுத்தவர் கைது

Thipaan   / 2015 ஓகஸ்ட் 17 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்

தேர்தல் வாக்களிப்பின் போது தனது வாக்குச் சீட்டை, சட்டவிரோதமான முறையில் புகைப்படம் எடுத்த நபர் ஒருவரைக் இன்று காலை (17)  கைதுசெய்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

வென்னப்புவ லுனவில பௌத்த கனிஷ்ட வித்தியாலய வாக்களிப்பு நிலையத்தில் வைத்து, லுனுவில பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது  இளைஞர் ஒருவரையே கைதுசெய்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் வாக்கைப் பதிவு செய்ய ஒதுக்கியுள்ள கார்ட்போர்ட் மறைவிடத்தில் வைத்து வாக்குச் சீட்டில் தனது வாக்கை பதிவு செய்த பின்னர் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடந்துள்ளார்.

வாக்களிப்பு நிலைய அதிகாரிகள்  குறித்த நபரை அவதானித்தபோது, அவர்;  வாக்குச் சீட்டை புகைப்படம் எடுப்பதை  கண்டுள்ளனர்.  இதனை அடுத்து அந்த நபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபருக்கு வாக்களிக்க இடமளிக்கப்பட்டதாகவும், வாக்களிப்பு நிலையத்தில் சட்டவிரோத செயலை செய்தமைக்காக கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்த பொலிஸார், சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாக தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X