Thipaan / 2015 ஓகஸ்ட் 20 , மு.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இஸட். ஷாஜஹான்
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் தோல்வி அடைந்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியில் ஒருவரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த நால்வருமே இவ்வாறு தோல்வியை சந்தித்துள்ளனர். இவர்களில் முன்னாள் பிரதி அமைச்சர்களும் அடங்குகின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரோ 63,929 விருப்பு வாக்குகளைப் பெற்று தனது கட்சியின்; சார்பில் பத்தாவது இடத்தைப் பெற்று தோல்வி அடைந்துள்ளார்.
அதேபோன்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த முன்னாள் பிரதி அமைச்சர்களான பீலிக்ஸ் பெரேரா (43,476 வாக்குகள்), சரத்குமார குணரத்ன (36,477 வாக்குகள்), பண்டு பண்டாரநாயக்க (42,692 வாக்குகள்), முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான உபேக்ஸா சுவர்ணமாலி (22,689 வாக்குகள்) ஆகியோரும் இம்முறை தோல்வி அடைந்துள்ளனர்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் நீர்கொழும்பு அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான ரொயிஸ் பெர்னாந்து 57,013 விருப்பு வாக்குகள் பெற்று 11ஆவது இடத்தைப் பெற்று நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் கட்டானை அமைப்பாளர் சட்டத்தரணி ரோஸ் பெர்னாந்து 53,779 வாக்குகள் பெற்று 12 ஆவது இடத்தைப்பெற்று தோல்வியடைந்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஸாபி ரஹீம் 33,746 விருப்பு வாக்குகளைப்; பெற்று 16ஆவது இடத்தை அடைந்து தோல்வியைச் சந்தித்துள்ளார்.
10 minute ago
13 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
13 minute ago
21 minute ago