Editorial / 2020 மார்ச் 18 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜூட் சமந்த
இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருகைதந்த 65 பேர், அத்தியாவசியத் தேவைகளுக்காக அன்றி வேறு தேவைகளுக்காக 14 தினங்கள் வரை, வெளியில் செல்ல வேண்டாமென, மாரவில மாவட்ட நீதவான் ஹேஷந்த தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாத்தாண்டிய, கட்டுனேரிய, மாவில, மாரவில ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாத்தண்டிய சுகாதார வைத்திய அதிகாரி உபுல் ஜயதிலக்க நீதிமன்றிடம் முன்வைத்த கோரிக்கைக்கமைய, நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்த வருகைதந்த பலர், தனிமைப்படுத்தல் சிகிச்சையை மேற்கொள்ளாதுள்ளாளமை குறித்து, சுகாதார வைத்திய அதிகாரி உபுல் ஜயதிலக்க , நீதிமன்றில் முன்வைத்த காரணங்களை ஆராய்ந்தே, நீதவான் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
47 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago