Editorial / 2017 ஜூன் 18 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

முல்லேரியாவில் அமைந்துள்ள தொற்றுநோய்களுக்கான தேசிய மருத்துவமனைக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சனிக்கிழமை (17) கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.
இதன்போது, மருத்துவமனையின் குறைபாடுகள் தொடர்பாக விசாரித்த ஜனாதிபதி, அவற்றை துரிதமாகத் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.
டெங்கு நோயாளர்களால் மருத்துவமனை நிரம்பியுள்ளதால் ஏற்பட்டுள்ள இட நெருக்கடி காரணமாக, நோயாளர்களைத் தங்கவைத்தல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள போதிலும் நோயாளர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளுடனும் அவர்களை தலங்கம, வேதர மற்றும் பிளியந்தல மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்த பின்னர், மருத்துவமனையின் செயற்பாடுகள் மீண்டும் உரியவாறு மேற்கொள்ளப்படுகின்றன.
இச்செயற்பாடுகள் தொடர்பாக கண்டறிந்த ஜனாதிபதி, வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்ட நோயாளர்களுக்குத் தேவையான அனைத்து விசேட மருத்துவ சிகிச்சைகளையும் குறைவின்றி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கினார்.
பின்னர், டெங்கு நோயாளர்களின் வார்ட்டுத் தொகுதியை அவதானித்த ஜனாதிபதி, நோயாளர்களின் விவரங்களை விசாரித்து, அவர்களுடன் சினேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார்.
அதன் பின்னர் மருத்துவமனையின் பணியாட்களுடனான சந்திப்பில் ஈடுபட்டதுடன், மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட மருத்துவமனையின் ஏனைய குறைபாடுகள் தொடர்பாக வினவினார்.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் மருத்துவமனையின் பணிப்பாளர் திமுது ரத்நாயக்க உள்ளிட்ட குழுவினர், இவ்விஜயத்தில் இணைந்துகொண்டனர்.
10 minute ago
30 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
30 minute ago
2 hours ago