Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2017 மே 22 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூனியன் அஷ்யூரன்ஸினால் உயர் தரம் வாய்ந்த சேவை வழங்கப்படுவதுடன், தொடர்ந்தும் ஒப்பற்ற காப்புறுதி தீர்வுகள் வழங்கப்படுகின்றன. இதில் அர்ப்பணிப்பான செயலணியினர் வழங்கியிருந்த பங்களிப்பு முக்கிய அங்கம் வகிக்கிறது. துறையில் 30 ஆண்டுகளாக இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியாக கலாசாரம் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அதன் ஊழியர்களின் அபிவிருத்தியில் முதலீடுகளை மேற்கொள்வதுடன், அவர்களின் சாதனைகளையும் கௌரவித்த வண்ணமுள்ளது.
இதன் அடிப்படையில், நிறுவனத்தின் மூலமாக, வருடாந்தம் சிறப்பாக செயலாற்றும் ஊழியர்களுக்கு வெளிநாட்டு சுற்றுப்பயண வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. 2016ல் சிறப்பாக செயலாற்றிய 159 ஊழியர்களுக்கு அவர்களின் திறமை வெளிப்பாடுகளின் அடிப்படையில், வருடாந்த வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் பங்கேற்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளனர். சிறந்த 20 பேருக்கு, சுவிட்ஸர்லாந்துக்கு சென்று வருவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்ததுடன், 15 பேருக்கு சிங்கப்பூரில் க்ரூஸ் சுற்றுப்பயணத்தை மேற்கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. எஞ்சிய 94 பேருக்கு மலேசியாவுக்கு சென்று வருவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. குறித்த நாடுகளின் பிரதான சுற்றுலாத்தலங்களை பார்வையிடுவதற்கான வாய்ப்பு ஒவ்வொரு அணிக்கும் வழங்கப்பட்டிருந்தது. நிறுவனத்தில் சிறப்பாக செயலாற்றியிருந்தவர்களுக்கு அவர்களின் வாழ்நாளில் கிடைத்திருந்த மறக்க முடியாத அனுபவமாக இது அமைந்திருந்ததுடன், வௌ;வேறு கலாசாரங்கள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் ஆகியவற்றை பார்வையிடுவதற்கு கிடைத்த முக்கிய வாய்ப்பாகவும் அமைந்திருந்தது.
நிறுவனத்தினுள் பேணப்படும் பயில்வதற்கான வாய்ப்பு மற்றும் திரட்டிய தொலைநோக்குடனான செயற்பாடுகள் ஆகியவற்றுக்காக பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டிருந்தது. மேலும், தனது சகல பங்காளர்களின் வெற்றி இலக்குகளையும் எய்துவதற்காக தனது பயணத்தை யூனியன் அஷ்யூரன்ஸ் எப்போதும் முன்னெடுத்த வண்ணமுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
1 hours ago