2021 ஜூன் 18, வெள்ளிக்கிழமை

மாணவர்களுக்காக எடிசலாட் நிறுவும் அறிவு நிலையங்கள்

Super User   / 2010 செப்டெம்பர் 01 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மாணவர்களின் அறிவை வளர்ப்பதை நோக்காகக் கொண்டு, எடிசலாட் லங்கா நிறுவனம், 'கல்வியின் மூலம் இன்றைய உலகை அணுகுங்கள்' எனும் தொனிப்பொருளில்  பின்தங்கிய பிரதேசங்களில் அறிவு நிலையங்களை நிறுவும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இத்திட்டத்தின் முதல் இரு நடவடிக்கைகளாக, அவிசாவளை மற்றும் பாதுக்க பகுதிகளில் இரு அறிவு நிலையங்களை ஆரம்பித்த எடிசலாட், மூன்றாம் மற்றும் நான்காம் கட்டமாக மஹாகொட மற்றும் அஹங்கம ஆகிய பிரதேசங்களில் மேலும் இரு அறிவு நிலையங்களை ஆரம்பித்துள்ளது.

மஹாகொட கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் தொம்பாகொட மகா வித்தியாலயம் ஆகியன இந்த அறிவு நிலையங்களை அமைப்பதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன.

மஹாகொட கனிஷ்ட வித்தியாலயம் க.பொ.த சா.த வரை வகுப்புகளைக் கொண்டுள்ளதுடன், தொம்பாகொட மகா வித்தியாலயம் உயர் தரம் வரை வகுப்புகளை கொண்டுள்ளது. இவ்விரு பாடசாலைகளையும் சேர்ந்த மாணவர்கள், க.பொ.த. சா.த மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.   

இந்த அறிவு நிலையம் நிறுவும் திட்டத்தின் கீழ், இரு பாடசாலைகளினதும் நூலகங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டதுடன், 1500  இற்கும் அதிகமான புத்தகங்கள், வரைபடங்கள் மற்றும் இதர வாசிப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டிருந்தன. மேலும் வசதியாக இருந்து வாசிக்கக் கூடிய வகையில், கதிரைகளும் மேசைகளும் வழங்கப்பட்டுள்ளதுடன், புத்தகங்களை முறையாக அடுக்கி வைப்பதற்கு ஏற்ற வகையில் இரும்பு புத்தக அலுமாரியும் வழங்கப்பட்டுள்ளது. பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் பயனடையும் வகையில், எடிசலாட் இந்த அறிவு நிலையங்களுக்கு புரொஜெக்டர், தொலைக்காட்சி, வி.சி.டி. பிளேயர் ஆகியவற்றுடன் கல்விசார் இறுவட்டுக்களையும் வழங்கியுள்ளது.

இரு கல்லூரிகளினதும் அதிபர்கள் கருத்து தெரிவிக்கையில், இக்கால மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர், அவர்களின் தேவைகளை ஈடுசெய்ய எடிசலாட் முன்வந்தது எமக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தயுள்ளது என்றனர்.

எடிசலாட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், தலைமை அதிகாரியுமான துமிந்திர ரத்நாயக்க கருத்து தெரிவிக்கையில், 'எதிர்கால சந்ததியின், அறிவை விருத்தி செய்யும் நடவடிக்கையில் ஒரு நிறுவனம் எனும் வகையில் நாம் ஈடுபடுவது குறித்து பெருமையடைகிறோம்' என்றார்.  
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .