2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

அமில் நிறுவனத்தின் 'டிசைனர் ரோலர் டோர்'

Super User   / 2010 செப்டெம்பர் 09 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவுஸ்திரேலியாவின் தொழில்நுட்பத்துக்கமைய வடிவமைக்கப்பட்ட 'டிசைனர் ரோலர் டோர்' எனும் பாதுகாப்புக் கதவுகள் இலங்கையின் கட்டடக் கலை வல்லுநர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கை நிர்மாண கலை கல்வியகத்தின் தொழில்நிபுணத்துவ சபையின் தலைவர் ஜயம்பதி ஹேரத்  பிரதம விருந்திராக கலந்துகொண்ட இந்நிகழ்வு அண்மையில் கொழும்பு காலிமுகத்திடல் ஹோட்டலில் நடைபெற்றது.

 இந்நிகழ்வில் ரோலர் கதவில் காணப்படும் றிவர்ஸ் சென்சர் (Reverse Sensor) மூலம் கதவை மூடும் பொழுது தற்செயலாக சிறுவர் மீதோ அல்லது வாகனத்தின் மீதோ பட நேர்ந்தால், எந்த வித பாதிப்புமின்றி உடனடியாக மேலே எழுகின்றது. கதவு மூடியிருக்கும் நிலையில் எவராவது முறையற்ற விதத்தில் கதவை திறக்க முற்படின் எச்சரிக்கை சமிக்ஞையையும் எழுப்புகிறது. டிசைனர் ரோலர் டோர்களுக்காக பயன்படுத்தப்படுவது அதியுயர் வினைத்திறன் கொண்ட சுயகட்டுபடுத்திகள் மூலமாகும். ஏனைய சுயகட்டுபடுத்திகளின் மூலம் இந்த கதவை கட்டுப்படுத்த முடியாது என்பன குறித்து விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

முற்றிலும் அவுஸ்திரேலிய தொழில்நுட்பத்துக்கமைய வடிவமைக்கப்பட்ட இந்த ரோலர் கதவுகள் 10 நிறங்களில் அமைந்துள்ளன. அதி நவீன தொழில்நுட்பத்துக்கமைய தயாரிக்கப்பட்ட இந்த கதவுகள் மழைநீர் பட்டாலும் நீர் தேங்கி நிற்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீளத்தில் அடி 24 உயரத்தில் 20 அடியும் கொண்டமைந்த இந்த கதவுகள், 0.6 மி.மீ தடிப்பும் கொண்டதாகும். இந்த சிறப்பம்சங்களை கொண்டமைந்துள்ளதால் பெரிய ரோலர் கதவுகளை நிறுவும் பொழுது சிறந்த தெரிவாக அமைவதாக அமில் நிறுவனம் அறிவித்திருந்தது.

தற்போது சந்தையில் ஏனைய நிறுவனங்கள் தயாரிக்கும் ரோலர் கதவுகளுக்கு இரண்டு வருட உத்தரவாதம் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆயினும் இந்த ரோலர் கதவுகளின் விசேட அம்சமாவதுஇ இதிலுள்ள மோட்டாருக்கு இரண்டரை வருடங்கள் உத்தரவாதம் வழங்கப்படுவதுடன் முதலாவது பராமரிப்பு சேவை இலவசமாகவே மேற்கொள்ளப்படுகிறது. முதலாவது பராமரிப்பு சேவையின் பின்னர் தொடர்ந்து பராமரிப்பு சேவைகளை தொடர்ச்சியாக வழங்கக் கூடிய வசதிகள் அமில் நிறுவனத்திடம் காணப்படுகிறன.

 இது குறித்து அமில் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிஹான் அபேசுந்தர கருத்து தெரிவிக்கையில்,  " இலங்கையில் நாம் டிசைனர் ரோலர் டோர் தயாரிப்பை ஆரம்பித்து ஒரு மாத காலமே கடந்துள்ளது. ஆயினும் இது வரை 100க்கும் அதிகமான ரோலர் டோர்களை விநியோகித்துள்ளோம். தற்போது இந்நிகழ்வின் மூலம் எமது நாட்டின் கட்டடக் கலை வல்லுநர்களுக்கு எமது தயாரிப்பபை அறிமுகப்படுத்துவதன் மூலம் எமது தயாரிப்புக்கு இலங்கையில் மேலும் சிறந்த வரவேற்பு ஏற்படும் என நாம் நம்புகிறோம். அத்துடன் அண்மையில் நடந்தேறிய 'கதெல்ல' கண்காட்சியிலும் சிறந்த தயாரிப்பாக எமது டிசைனர் ரோலர் டோர் தெரிவு செய்யப்பட்டிருந்தமை எமது தயாரிப்பின் தரத்துக்கு மேலும் சான்று பகர்வதாக அமைந்துள்ளது" என்றார்.

 இந்நிகழ்வில் அமில் நிறுவனத்தின் தலைமை அதிகாரி வோல்டர் அபேசுந்தர, பணிப்பாளர் ஹேஷினி சமரகோன் மற்றும் பொது முகாமையாளர் சுரங்க சாமிந்த ஆகியோர் கலந்து கொண்டனர்.

 1985 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அமில் நிறுவனத்துக்கு ஐளுழு 9001:2008 தரச் சான்றிதழ் கிடைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 600க்கும் அதிகமான ஊழியர்கள் கடமையாற்றுகின்றமை விசேட அம்சமாகும். மேலும் ICTAD தாபனத்தின் C-3 பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு நிறுவனமாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .