2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

Ivy மூலிகை இலையினால் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து

A.P.Mathan   / 2015 ஓகஸ்ட் 04 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

படர்க்கொடி (Ivy) இலையுடன் தேன் மற்றும் அறியப்பட்ட மூலிகைகள் அடங்கிய மூலப் பொருட்களைக் கொண்டு மருத்தவ பரிசோதனைகுட்பட்ட இருமல் கலவை இலங்கையிலுள்ள உள்ளுர் சந்தைக்கு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வைத்திய மருந்துச் சீட்டு இல்லாமல் பெற்றுக் கொள்ளக் கூடிய இந்த தயாரிப்பை, முன்னணி 10 சுகாதார நிறுவனங்களில் ஒன்றான Kalbe சர்வதேச நிறுவனம் தயாரித்து விநியோகிக்கின்றது.

Kalbeஇனால் தயாரிக்கப்படும் வூட்ஸ், இந்தோனேசியாவில் ஒரு நம்பகமான இருமல் தீர்வு நிவாரணி என்பதுடன் 100 ஆண்டுகளுக்கு மேல் இருமல் மற்றும் தொண்டை தொடர்பான வைத்திய நிவாரணம் அளிக்கும் மருந்துகளில் முன்னணியில் உள்ளது. (இதன் முதல் அறிமுகம் 1905ஆம் ஆண்டிலாகும்) மூலிகை இருமல் மருத்துவம் உள்ளடக்கிய பல புதுப்பிக்கும் பொருட்களில் முக்கிய கூறான படர்க்கொடி இலை (Ivy Leaf) உள்ளடக்கப்பட்டுள்ளது. 'வூட்ஸ் மூலிகை இருமல் மருந்து'க்கு மேற்கில் இருந்து தேன் Phyllantus niruri (Meniran இலை) மற்றும் புதினா இலை சாறு (Mint Leaf) ஆகிய எதிர்ப்பு சக்திகொண்ட பாதுகாப்பான மூலிகைக் கலவைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதில் முற்றிலும் ஆல்கஹால் இல்லாத மற்றும் இரண்டு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.

எனவே, வூட்ஸ் மூலிகை இருமல் கலவையானது சந்தையின் பெரும் வெற்றிடத்தை நிரப்புகிறது. குறிப்பாக சில இரசாயன கலவைகள் கொண்ட இருமல் கலவைகளை தவறாக பயன்படுத்தியதன் காரணமாக நோயாளிகள் மீது தீய விளைவுகளை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் மரணத்தை விளைவித்ததாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதோடு இருமல் மருந்து கலவைகளில் சந்தேகங்களையும் தோற்றுவித்தன. இதன் காரணமாக இரசாயன இருமல் கலவைகளுக்கு இலங்கையில் தடைவிதித்து, சந்தையில் தற்போது பெரும்பாலான இரசாயன இருமல் கலவையை வாங்குவதற்கு வைத்திய மருந்துச் சீட்டு பயன்பாடு கட்டாயப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக வூட்ஸ் இருமல் மருந்து கலவை சிறியவர்களுக்கும் பெரியவர்களுக்கும் நிவாரணம் அளிக்கக் கூடிய சிறந்த மூலிகை மருந்தாக சரியான நேரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த முயடடிந Kalbe International PTE Ltd நிறுவனத்தின் வதிவிட முகாமையாளர் சுதர்ஷன ஜயதிலக்க, 'நாம் இந்த மூலிகை சூத்திரத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்த முக்கிய காரணம் மூலிகை இருமல் மருந்து கலவைக்கான தேவை அதிகமாக இருந்தது. ஒரு சில நேரம் சிறிய அளவில் சளி மற்றும் இருமல் இருந்தால் நோய் எதிர்ப்பிற்காக வைத்திய மருந்துச் சீட்டு இன்றி மருந்தகங்களுக்குச் சென்று இருமல் நிவாரணியை இலகுவாக வாங்கி பயன்படுத்த முடியும். சுகாதார திணைக்களத்தினால் இருமல் பாகுகள் அடங்கியுள்ள இரசாயன கலவை காரணமாக வைத்திய ஆலோசனைப்படி பெற்றுக்கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது இதன் காரணமாக இந்த இடத்தை பூர்த்தி செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. Woods Herbal Cough மருந்துகள் இயற்கை மூலிகைகளினால் தயாரிக்கப்பட்டுள்ளதனால் எவ்வித பக்க விளைவுகளும் இல்லாதது என்பதுடன் உடலுக்கு மிகவும் சிறந்ததாகும்' எனத் தெரிவித்தார்.

ஆங்கில படர்க்கொடி (Englis Ivy) இலையானது பல நூற்றாண்டுகளாக சுவாச கோளாறுகளை சமாளிப்பதற்கும் மற்றும் இருமல் தொடர்பான மருந்துவ அறிகுறிகளை விடுவிப்பதற்கும் பயன்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மறுபுறத்தில் தேன், இது வீட்டு வைத்திய தேவைக்காக பயன்படுத்தப்படும் நோய் நிவாரணியாகும். மேலும் ஊட்டச் சத்துக்கள் இருப்பது மட்டுமன்றி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது. தேனின் பயன்பாடானது இருமலைக் குறைப்பதற்கும் சிறந்தது என பல்வேறு புத்தகங்களிலும் பிரசுரமாகியுள்ளன. எனினும் Meniran இலை உடலின் செயற்பாடுகளை சீராக்குவதற்கு உதவுவதுடன் அதேநேரத்தில் புதினா இலைகள் சளியை திரவமாக்குவதோடு மற்றும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.

உலகில் முக்கிய பகுதிகளில் தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் Kalbe நிறுவனம் சிங்கப்பூரை தலைமையகமாகக் கொண்டுள்ளதுடன் இலங்கையிலும் Kalbe International PTE Ltd நிறுவனம் தமது செயற்பாடுகளை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றது. ஆசியாவில் மருந்தக நிறுவன பட்டியலில் 7ஆவது இடத்திலுள்ள Kalbe 24 ஆண்டுகளுக்கு மேல் இலங்கையில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. Kalbe Hayley’s குழுமத்துடன் இணைந்து இலங்கை முழுவதும் உடல்நல நுகர்வுப் பொருட்களை இறக்குமதி செய்யவும் மற்றும் விநியோகிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக Hayleys நுகர்வுப் பொருள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி Clifford Nugara கருத்துத் தெரிவிக்கையில், 'பாரம்பரிய அணுகுமுறைகளுக்கு அமைய Ivy இலை மற்றும் தேன் உட்பட அறியப்பட்ட மூலிகையினால் தயாரிக்கப்பட்ட இந்த Woods Herbal Cough Syrupஐ Kalbe சர்வதேச நிறுவனம் தயாரித்து விநியோகிக்கும் செயற்பாடுகளுடன் கைகோர்த்தமை ஒரு தனித்துவமான சந்தர்ப்பமாகக் கருதுகிறோம்' எனத் தெரிவித்தார்.

Woods தயாரிப்புப் பட்டியலில் Kalbe நிறுவனத்தின் தயாரிப்பிலான இருமல் நிவாரணி இலங்கை சந்தைக்கு முதன் முறையாக அறிமுகப்படுத்துவதோடு மேலும் வைத்திய மருந்துச் சீட்டு இல்லாமல் பெற்றுக் கொள்ளக்கூடிய ஏனையப் பொருட்களையும் சந்தைக்கு அறிமுகம் செய்ய Kalbe சர்வதேச நிறுவனம் எதிர்பார்க்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X