2024 ஒக்டோபர் 13, ஞாயிற்றுக்கிழமை

அன்லிமிடெட் அழைப்புகளை வழங்கும் SLT-MOBITEL

Freelancer   / 2024 ஜூலை 08 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான SLT-MOBITEL, குடும்பத்தார் மற்றும் சிறு வியாபாரங்களை இலக்காகக் கொண்டு அன்லிமிடெட் அழைப்பு பக்கேஜ்களை அறிமுகம் செய்துள்ளது.

தெளிவான, தடங்கலில்லாத குரல்சார் தொடர்பாடல்களை மேற்கொள்வதற்கு வாடிக்கையாளர்கள் SLT-MOBITEL இன் நிலையான இணைப்பில் தங்கியிருப்பதை உணர்ந்துள்ளது. அன்லிமிடெட் அழைப்புகளை வழங்கும் பக்கேஜினூடாக, அழைப்புகளை மேற்கொள்ளும் போது காணப்படும் சகல கட்டுப்பாடுகளையும் நீக்கி, தெளிவான மற்றும் தங்கியிருக்கக்கூடிய நிலையான இணைப்பு வலையமைப்பை வழங்குகின்றது.

SLT-MOBITEL என்பது பகிரப்பட்ட குடும்ப வளமாக அமைந்திருப்பதை உணர்ந்துள்ளது. பக்கேஜின் குடும்பத்துக்கு நட்பான வழிமுறையினூடாக, முழு இல்லாத்தாருக்கும் வரையறைகளற்ற அழைப்புகளை எவ்விதமான கட்டுப்பாடுகளுமின்றி அனுபவிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படுகின்றது. நிலையான இணைப்பில் அன்லிமிடெட் அழைப்புகள் வசதியை பயன்படுத்தும் சகல குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் இதர வாடிக்கையாளர்களுக்கு இந்தப் பக்கேஜ் மிகவும் பொருத்தமானதாக அமைந்துள்ளது.

SLT-MOBITEL அன்லிமிடெட் அழைப்புகள் பக்கேஜினூடாக, எந்தவொரு மொபைல் அல்லது நிலையான இணைப்பு வலையமைப்புக்கும் அன்லிமிடெட் குரல் அழைப்புகளை மேற்கொள்ளும் வசதியை வழங்குவதுடன், ஒப்பற்ற மாதாந்த வாடகையில், நிகரற்ற பெறுமதியை சேர்க்கின்றது. தங்கியிருக்கக்கூடிய, உயர் தரம் வாய்ந்த தொடர்பாடல் தீர்வுகளை நாடும் குடும்பத்தார் மற்றும் சிறு வியாபாரங்களுக்கு இந்தப் பக்கேஜ் மிகவும் அனுகூலமளிப்பதாக அமைந்திருக்கும்.

பிற்கொடுப்பனவு பக்கேஜ், ரூ. 747 மட்டுமாக அமைந்துள்ளது (வரிகள் நீங்கலாக), இதனூடாக சிறந்த சகாயத்தன்மை வழங்கப்படுகின்றது. சந்தையில் காணப்படும் இதர தெரிவுகளைப் போலன்றி, இந்தப் பக்கேஜ் SLT-MOBITEL வலையமைப்புகளுக்கு மாத்திரம் மட்டுப்படாமல், எந்தவொரு உள்நாட்டு மொபைல் அல்லது நிலையான இணைப்பு வலையமைப்புக்கும் பரந்த இணைப்புத் திறன் வசதியை வழங்குகின்றது.

SLT-MOBITEL இன் பிற்கொடுப்பனவு பக்கேஜினூடாக, நிமிடங்கள் தீர்ந்துவிடும் எனும் கவலையை போக்கி, நிலையான, தடங்கலில்லாத சேவை வழங்கப்படுகின்றது. மேலும், SLT-MOBITEL இனால் இணைப்புகள் இழப்பு அல்லது மேலதிக பாவனை கட்டணங்களின்றி, தெளிவான, பாதுகாப்பான, உயர் தரம் வாய்ந்த குரல் அழைப்புகள் வழங்கப்படுகின்றது. இந்த பக்கேஜினால் தங்கியிருக்கும் திறன் மற்றும் வாடிக்கையாளர் தன்னிறைவு ஆகியன உறுதி செய்யப்படுகின்றன.

புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய தீர்வுகள் போன்றவற்றுக்கான SLT-MOBITEL இன் அர்ப்பணிப்பை உறுதி செய்து, இந்தப் பக்கேஜினூடாக, எவ்விதமான மேலதிக பாவனை கட்டணங்களுமின்றி, ஏற்கனவே காணப்படும் தொலைபேசி இலக்கத்தில், வாடிக்கையாளரின் வளாகத்தில் காணப்படும் சாதனத்தில் பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகின்றது. எவ்வாறாயினும், அவசியமான சாதனங்களை (CPE) SLT-MOBITEL இடமிருந்து மேலதிகமாக ரூ. 155.00 செலுத்தி பெற்று, ஒப்பற்ற இணைப்பு மற்றும் பாவனையை உறுதி செய்து கொள்ளலாம்.

நிகரற்ற சௌகரியத்தையும், அன்லிமிடெட் அழைப்பு பக்கேஜின் பெறுமதியையும் அனுபவிப்பதற்கு வாடிக்கையாளர்களை SLT-MOBITEL அழைக்கின்றது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .