2025 ஜூலை 30, புதன்கிழமை

அபான்ஸுடன் பண்டிகைக்காலக் குதூகலம்

Princiya Dixci   / 2016 நவம்பர் 14 , பி.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

குதூகலமும் கொண்டாட்டமும் நிறைந்த இந்தப் பண்டிகைக் காலத்தில், உலகத் தரம்வாய்ந்த உற்பத்திகளுக்கு பல சிறப்புச் சலுகைகளை அபான்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்க முன்வந்துள்ளதாக அறிவித்துள்ளது.  

இதற்கமைவாக, உலகின் முதற்தர இலத்திரனியல் மற்றும் வீட்டு மின் உபகரணங்களுக்கு 50% வரையான விலைக்கழிவுடன் சிறப்புத் தள்ளுபடியையும், பழையப் பொருட்களுக்குப் புதிய பொருட்களை வழங்கும் பண்டமாற்ற சலுகைகள், நீடிக்கப்பட்ட உத்தரவாதம், பொதிக்கொள்வனவு, வட்டியற்ற தவணைத் திட்டங்களுடன் பெறுமதியானப் பரிசுகளை இலவசமாக பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது.  

பண்டிகைக் காலத்தை களிப்பூட்டும் வினோதமான அலங்காரங்கள் மற்றும் இனிமையான இசைகளுடன் அபான்ஸ் காட்சியறைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் விழாக்கால சிறப்பியல்புகளை மனநிறைவோடு அனுபவிக்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. நத்தார் பண்டிகைக்காலத்தில் பெரியோர், சிறியோர் அனைவரும் ஒன்றிணைந்து மகிழ்சியோடு கொண்டாடக்கூடிய பல்வேறு சிறப்பம்சங்களை அபான்ஸ் ஏற்பாடு செய்துள்ளது.  

நத்தார் பண்டிகைக் காலத்தில் அன்பளிப்புகளை வழங்குவது மட்டுமின்றி உங்கள் வீட்டுக்குத் தேவையானப் பொருட்களையும் அபான்ஸில் கொள்வனவு செய்யலாம். ஆரோக்கியத்தைப் பேணும், மின்சாரத்தைச் சேமிக்கும், சூழல் நட்புறவுமிக்க உலகின் முதற்தரமானத் தயாரிப்புகளை உங்கள் இல்லத்தின் பாவனைக்கு மட்டுமின்றி உங்கள் அன்புள்ள உறவினர்களுக்குமான அன்பளிப்புப் பொருட்களை வாங்கும் வசதிகளும் அபான்ஸில் காணப்படுகின்றன.  

உலகின் முதற்தர நாமங்களின் உற்பத்திகளுக்கு உயர் உத்தரவாதத்துடன், விற்பனையின் பின்னரான சிறப்புச் சேவையை அபான்ஸ் வழங்குகிறது. பண்டிகைக் காலத்தில் உங்கள் அன்பான கணவருக்கு, மனைவிக்கு, பெற்றோருக்கு, பிள்ளைகளுக்கு, உறவினர்களுக்கு மட்டுமின்றி நண்பர்களுக்கும் நீங்கள் வழங்கும் அன்பளிப்புகளை வழங்குவதற்கு நீங்கள் செலவு செய்யும் பணத்தை விட குறைந்த விலையில் பெறுமதியான மிகக்சிறந்த அன்பளிப்புகளைத் தெரிவுசெய்யகூடிய ஒரே இடம் அபான்ஸ் காட்சியறைகளாகும்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .