2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

அறிவு பூர்வமான முதலீட்டுக்கு வளமான பங்குச் சந்தை

Editorial   / 2018 மார்ச் 19 , பி.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கே.எல்.ரி.யுதாஜித்

கொழும்பு பங்குப் பரிவர்த்தனை மற்றும் பிணையங்கள் மற்றும் பங்குப்பரிவர்த்தனை ஆணைக்குழு என்பன இணைந்து அறிவு பூர்வமான முதலீட்டுக்கு வளமான எனும் தொனிப்பொருளின் கீழ், பங்குச் சந்தை நகரங்கள் தோறும் பங்குச் சந்தை முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் சமகால சந்தை நிலமைகள் தொடர்பான முதலீட்டு ஆர்வலர்களுக்கான விழிப்பூட்டும் கருத்தரங்கொன்றை சனிக்கிழமை மட்டக்களப்பு ஈஸ்ற் லகூன் விடுதியில் நடத்தியது.

இங்கு மூலதனச் சந்தை அறிமுகம் மற்றும் துறை பெறுபேற்றுப் பகுப்பாய்வு சந்தை வாய்ப்பு தொடர்பான முன்னிலைப்படுத்தல் தொடர்பான விரிவுரைகள் இடம்பெற்றன.

வளவாளர்களாக ஆசிய அபிவிருத்தி வங்கி கூட்டு முதலீட்டுத் திட்ட ஆலோசகர் பீ.அசோகன் மற்றும் உரிமை முதல் ஆய்வு நிபுணர் ஆர்.ரகுராம் கலந்து கொண்டு பங்குச் சந்தை தொடர்பான விரிவுரைகளை நடாத்தினர்.

அத்துடன் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் யாழ். கிளை முகாமையாளர் எம்.திலீபன் மற்றும் வளவாளர்களும் பங்கு கொண்டவர்களின் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் விளக்கங்கள் வழங்கினார்.

பங்குச் சந்தை முதலீட்டில் கவனம் செலுத்த வேண்டிய காரணிகள் பங்குத் தரகர் ஒருவரைத் தெரிவு செய்தல், புதிய கணக்கொன்றை ஆரம்பித்தல், வர்த்தகம் செய்பவர் எப்படி பங்கு வர்த்தகங்களை மேற்கொள்ளல், வர்த்தக விடயங்கள் தொடர்பான பிற விடயங்களை அறிதல். என்பன ஆராயப்பட்டன.

அத்தோடு, இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு ஆகியவற்றின் பிரதிநிதிகள் நம்பிக்கை அலகு நிறுவனங்களின் பிரதிநிதிகளை இவர்களைச் சந்திக்கக்கூடிய வாய்ப்புகளையும் இக்கருத்தரங்கு மூலம் ஏற்படுத்த முடிந்தது. இங்கு மாவட்டத்தில் உள்ள வர்த்தகர்கள் அதிகளவில் கலந்து கொண்டனர்.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும், வர்த்தகர்களின் முதலீட்டை அதிகரிப்பதற்குமான நோக்கத்தில் கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நாடு பூராகவும் இதுபோன்ற விரிவுரைகளை நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதுடன், இது முதலாவது விரிவுரைக் கருத்தரங்கு என்பதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .