Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2020 ஜனவரி 30 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
அல்ட்ராடெக் சீமெந்து நுகர்வோருக்கு அனுகூலங்களை பெற்றுக் கொடுக்கும் வகையில் தனது விலைக்குறைப்பு தொடர்பில் அறிவித்துள்ளது. 2019 டிசெம்பர் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி, தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி ஆகியவற்றின் திருத்தங்களின் பிரகாரம், நுகர்வோர் விவகார அதிகார சபையால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய அல்ட்ராடெக் சீமெந்து பொதி ஒன்றின் விலையை 950 ரூபாயாக குறைத்துள்ளது.
அல்ட்ராடெக் சீமெந்து லங்கா (பிரைவட்) லிமிடெட் வழங்கும் விற்பனைக்கு முந்திய மற்றும் விற்பனைக்கு பின்னரான சேவைகள், தொழில்நுட்ப சேவைகள் போன்றவற்றை வாடிக்கையாளர்கள் தொடர்ந்தும் அனுபவிக்கக்கூடியதாக இருக்கும்.
உலகின் மூன்றாவது மாபெரும் சீமெந்து உற்பத்தி நிறுவனமான (சீனா தவிர்ந்த) அல்ட்ராடெக் சீமெந்து லிமிடெட்டின் துணை நிறுவனமாக அல்ட்ராடெக் சீமெந்து லங்கா (பிரைவட்) லிமிடெட் திகழ்கின்றது. தன்வசம் 117 MTPA க்கு அதிகமான உற்பத்தித் திறனை கொண்டுள்ளது. பொறியியலாளர்களின் தெரிவாக அல்ட்ராடெக் சீமெந்து லங்கா திகழ்வதுடன், தொடர்ச்சியான தரத்தை வழங்கி வருகின்றது.
இந்தியாவில் பொசலோனோ சீமெந்து, ரெடி மிக்ஸ் கொங்கிறீற் (RMC), வெண் சீமெந்து ஆகியவற்றின் மாபெரும் உற்பத்தியாளராக அல்ட்ராடெக் சீமெந்து லிமிடெட் திகழ்கின்றது. வலிமை, தங்கியிருக்கும் திறன், புத்தாக்கம் ஆகியவற்றில் தங்கியிருக்கும் வர்த்தக நாமமாக அல்ட்ராடெக் திகழ்கின்றது. இந்த உள்ளம்சங்களுடன், பொறியியலாளர்களுக்கு தமது திட்டப்படி வீடுகள், கட்டடங்கள் மற்றும் உருக்களை அமைப்பதற்கு துணையாக அமைந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
18 May 2025