Editorial / 2020 செப்டெம்பர் 15 , பி.ப. 01:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆசிரி சென்ரல் வைத்தியசாலையின் நோயாளர் பராமரிப்பு, பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்து, தொடர்ச்சியான இரண்டாவது தடவையாக துஊஐ சான்றிதழைப் பெற்றுக் கொண்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் காணப்படும் வைத்தியசாலைகளின் தரத்தை உறுதி செய்து வழங்கப்படும் சான்றிதழாக இது அமைந்திருப்பதுடன், வைத்தியசாலைகளில் சிறந்த தரம் மற்றும் பாதுகாப்புடனான நோயாளர் பராமரிப்பு பேணப்படுவதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. கடுமையான மதிப்பீடுகளைக் கொண்டுள்ளதுடன், நோயாளர்களை அடிப்படையாகக் கொண்டு, பாதுகாப்பு, சுகாதார பராமரிப்பு, தரம் மற்றும் தர முகாமைத்துவ கட்டமைப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் Gold Seal of Approval® வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கு ஒரு தடவை JCI சான்றிதழ் புதுப்பிப்பு மீளாய்வு மேற்கொள்ளப்படுகின்றது.
இந்த ஆண்டின் முற்பகுதியில் இடம்பெற்ற ஆசிரி சென்ரல் வைத்தியசாலையின் தர மீளாய்வு விஜயத்தின் போது, 90 சதவீதத்துக்கும் அதிகமான புள்ளிகளைப் பெற்று, மீள்சான்றளிப்பை வைத்தியசாலை பெற்றிருந்தது.
தாதியியல் நிபுணர், வைத்தியர்கள் மற்றும் வசதிகள் நிபுணத்துவம் ஆகியவற்றுடன் சுகாதார கட்டமைப்புகளில் உலகாளவிய ரீதியில் தசாப்த கால அனுபவத்தைக் கொண்டவர்கள் JCI மதிப்பாய்வு அணியில் அடங்கியிருந்தனர். சகல சிகிச்சை, செயற்பாட்டு செயன்முறைகளையும் மீளாய்வுக்குட்படுத்தி இந்த சான்றிதழை வழங்கியிருந்தனர். ஆசிரி சென்ரல் வைத்தியசாலையின் உயர் ஒழுக்கப் பெறுபேறுகள் என்பதனூடாக, நோயாளர்களின் உயர்மட்ட பாதுகாப்பு நியமங்கள் மற்றும் பராமரிப்பு போன்றவற்றில் காண்பிக்கும் ஈடுபாடு மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளன.
புதுப்பிப்பு சான்றிதழை பெற்றுக் கொண்டமை தொடர்பில் பிரதம நிறைவேற்று அதிகாரி வைத்தியர். மஞ்சுள கருணாரட்ன கருத்துத் தெரிவிக்கையில்,
“ஆசிரி சென்ரல் வைத்தியசாலையைப் பொறுத்தமட்டில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சாதனையாக அமைந்துள்ளது. எமது முயற்சிகளுக்கு இந்த உயர்ந்த தரப்படுத்தலை பெற்றுக் கொள்ள முடிந்துள்ளதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். வைத்தியசாலை நோயாளர்களின் பாதுகாப்பு மற்றும் தரமான சிகிச்சைகள் தொடர்பில் அதிகளவு கவனம் செலுத்துகின்றமைக்காக கௌரவிக்கப்பட்டுள்ளதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம். தினசரி செயற்பாடுகளில் நிபுணத்துவம் வாய்ந்த மற்றும் அளவிடக்கூடிய நியமங்களை செயற்படுத்துவதில் நாம் காண்பிக்கும் அர்ப்பணிப்பை இதை உறுதி செய்துள்ளது. இந்த சான்றிதழினூடாக, வைத்தியசாலை பேணும் கடுமையான, குறிப்பிட்ட மற்றும் அளவிடக்கூடிய தேவைகள் பிரதிபலிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் உயர்ந்த நிலையை எய்துவதற்கு தூண்டுவதாக அமைந்துள்ளது” என்றார்.
சுகாதார பராமரிப்பு தேவைகள் தொடர்பில் ஆசிரி சென்ரல் வைத்தியசாலை உண்மையில் புரிந்துணர்வைக் கொண்டிருப்பதுடன், சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட உயர் தரம் வாய்ந்த பராமரிப்பு சிகிச்சையை வழங்குகின்றது. முன்னோடியான வைத்தியசாலை எனும் வகையில், நோயாளர் பராமரிப்பை மையப்படுத்தி இயங்கும், ஆசிரி சென்ரல் வைத்தியசாலை, நோயாளர்களுக்கு நவீன மருத்துவ சிகிச்சைகளை வழங்குவதுடன், உயர் தொழில்நுட்ப சத்திர சிகிச்சை தீர்வுகளையும் வழங்குகின்றது. இந்த சிகிச்சைகளை பெற்றுக் கொடுப்பதற்காக அனுபவமும் முறையான பயிற்சிகளையும் பெற்ற மருத்துவ அதிகாரிகளையும், தாதியியல் அணியையும் தன்வசம் கொண்டுள்ளது.
8 minute ago
16 minute ago
22 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
16 minute ago
22 minute ago
44 minute ago