2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

ஆடைகளை புதுப்பித்துக்கொள்வது அவசியம் - பௌசுல் ஹமீட்

Niroshini   / 2017 பெப்ரவரி 07 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

“ஆடைசார்ந்த அடிப்படையில் மிடுக்கான தோற்றத்துடன் திகழ வேண்டுமாயின் இலங்கையின் ஒவ்வொரு ஆடவரும் சில வருடங்களுக்கு ஒரு தடவை தங்களது அலுமாரிக்கு புதுப்பொலிவூட்டுவதுடன், அதற்காக மீள் முதலீட்டை மேற்கொள்ளவும் வேண்டும்” என்று பிரபலங்களின் நவநாகரிக ஒப்பனையாளரும் ஹமீடியா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருமான பௌசுல் ஹமீட் கருத்துத் தெரிவித்தார்.  

“ஆடைகள் சில காலத்தின் பின்னர் மங்கிவிடுகின்றன. நீங்கள் அவற்றை அதிகமதிகம் அணியவில்லை என்றாலும் இதைத் தவிர்க்க முடியாது. ஆடைசார் போக்குகள் நாளுக்குநாள் மாறிக் கொண்டிருக்கின்ற சூழலில் ஆடவர் ஒருவர் நவநாகரிக Stables மற்றும் கவர்ந்திழுக்கும் ஆடைகளின் மூலம் தனது அலுமாரியை புதுப்பொலிவூட்டுக் கொள்ளவும் இதற்காக மீள் முதலீடு செய்யவும் வேண்டும்” என்று அவர் கூறினார். அத்துடன், மிக நேர்த்தியாக ஆடை அணிந்த ஒரு ஆண் மகனை ஏனையோர் ஒரு வெற்றியின் அடையாளமாக நினைவில் வைத்துக் கொள்கின்றார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.  

அவர் மேலும் ஆலோசனை கூறுகையில், “ஒருவர் ஏற்கனவே தன்வசம் வைத்திருக்கும் ஆடைகளை முழுமையாக்குவதற்காக, புத்தெழில் ஊட்டுவதற்காக சாதூர்யமான முறையில் மிகச் சரியான ஆடைகள் சிலவற்றில் பணத்தை செலவழிக்கும் வேளையில், அது தொடர்பான விகிதாசார பங்கீட்டில் மாற்றங்களை கொண்டுவருதல் மற்றும் அணிகலன்களில் கூடிய கவனம் செலுத்துவதுடன், ஒருவரது உடம்பிற்கும் அவரது முகச்சாயலுக்கும் எந்த ஆடை பொருத்தமாக இருக்கும் என்பது தொடர்பான தெளிவான பார்வையை கொண்டிருப்பதும் அவசியமாகின்றது”  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X