2023 ஒக்டோபர் 01, ஞாயிற்றுக்கிழமை

ஆர்பிகோ இன்சூரன்ஸ் பிஎல்சி தொடர்ந்தும் வளர்ச்சியைப் பதிவு

Freelancer   / 2023 மே 26 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்பிகோ இன்சூரன்ஸ் பிஎல்சி, 2023 இன் முதல் காலாண்டில், தேறிய கட்டுப்பண செலுத்தல்களில் (GWP) 19.5% வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது. இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் ஐந்தாவது மாபெரும் வளர்ச்சியைப் பதிவு செய்த நிறுவனமாக ஆர்பிகோ இன்சூரன்ஸ் திகழ்கின்றது.

குழும ஆயுள் காப்புறுதி வியாபாரம், நிறுவனத்தின் வரலாற்றில் பதிவு செய்திருந்த உயர்ந்த GWP பெறுமதியான ரூ. 226 மில்லியனுக்கு அதிகமான தொகையை பதிவு செய்திருந்தது. அத்துடன், ஆயுள் காப்புறுதித் துறையின் இரண்டாவது மாபெரும் வியாபார எண்ணிக்கை வளர்ச்சியை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக அனுகூலங்கள் கூடுதல் இணைப்புகளாக காணப்படுவதுடன், காப்புறுதிதாரருக்கு பிரதான ஆயுள் காப்புறுதிப் பத்திரத்துடன், மேலதிக பாதுகாப்பை அனுபவிக்கும் வகையில் அமைந்துள்ளது. நிறுவனத்தின் மேலதிக அனுகூல இணைப்புகள் 50%க்கு மேலதிகமாக பதிவாகியிருந்தமை விசேடமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய அம்சமாகத் திகழ்கின்றது. வாழ்க்கைக்கான காப்புறுதி எனும் தொனிப்பொருளுக்கமைய தொடர்ச்சியாக நிறுவனத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்த காப்புறுதி வழங்கல் செயற்பாடுகளினூடாக நிறுவனத்தினால் இந்த உயர்ந்த பெறுமதிகளை எய்தக்கூடியாக இருந்தது.

ஆர்பிகோ இன்சூரன்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் முதன்மை அதிகாரியுமான கலாநிதி. கெலும் சேனநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “அண்மைக் காலங்களில் நாடு பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்திருந்த போதிலும், ஆயுள் காப்புறுதித் துறையில் சிறப்பாக செயலாற்ற முடிந்ததையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். எமது வியாபாரத்தின் சகல பிரிவுகளிலும் எமது வளர்ச்சியை நாம் தொடர்ந்து எய்திய வண்ணமுள்ளோம். நிறுவனத்தின் எதிர்காலம் தொடர்பில் நாம் அதிகளவு எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளதுடன், ஒவ்வொரு பிரிவுகளுக்குமான எமது மூலோபாய முன்னுரிமைகளுக்கு வலுவூட்டும் படிமுறைகளை நாம் மேற்கொண்ட வண்ணமுள்ளோம்.” என்றார்.

மூலோபாய திட்டமிடல் மற்றும் பங்காண்மைகள் பொது முகாமையாளர் பிரமோத கருணாதிலக கருத்துத் தெரிவிக்கையில், “எமது கணக்காய்வுகளின் போது எமது வினைத்திறன் மேம்பட்டிருந்ததை எம்மால் அவதானிக்க முடிந்தது. எமது குழும ஆயுள் காப்புறுதி வியாபாரத்தை கட்டியெழுப்பவும், மேம்படுத்தவும் நாம் பெருமளவு முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். எமது ஒவ்வொரு பிரிவுகளுக்கும் தூரநோக்குடைய திட்டங்களை நாம் கொண்டுள்ளதுடன், எமது நவீன செயன்முறைகள் மற்றும் உயர்மட்ட வாடிக்கையாளர் பராமரிப்பு ஆகியவற்றினூடாக அவற்றை வழிநடத்த எதிர்பார்க்கின்றோம். இந்த ஆண்டில் தொழிற்துறையில் எமது முதலாவது COT அங்கத்தவரை தயார்ப்படுத்தியிருந்ததையிட்டும் நாம் பெருமை கொள்கின்றோம்.” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .