Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 11 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்பிகோ அதன் நாடளாவிய வலையமைப்பிலுள்ள பிரதான சுப்பர் சென்டர்களை, மறுசீரமைத்துத் தரமுயர்த்தியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு ஒப்பற்ற ஷொப்பிங் அனுபவத்தை வழங்குவதே இதன் நோக்கமாகும். இந்த மறுசீரமைப்புத் திட்டத்தின் பயனாக, ஹைட் பார்க் கோனர், பத்தரமுல்லை, தெஹிவளை, நாவின்ன, கண்டி ஆகிய இடங்களிலுள்ள ஆர்பிகோ சுப்பர் சென்டர்களுக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள், இப்போது சர்வதேசத் தரத்துக்கு நிகரான ஷொப்பிங் அனுபவத்தைப் பெறுவார்கள்.
ஹைட் பார்க் கோனரிலுள்ள ‘fresh zone’ விசேடமான முறையில் மீள வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு பொருத்தப்பட்டுள்ள அதிநவீன ஈரலிப்பூட்டும் அமைப்புகளின் பயனாக பழங்கள், காய்கறிகள் மற்றும் மீன் முதலிய கடலுணவுகள் புதுநலம் குன்றாத தரத்துடன் பேணப்படுகின்றன. ‘fresh zone’ இப்பொழுது முன்னரைவிட விசாலமான இடவசதியையும் கொண்டிருப்பதால் வாடிக்கையாளர்கள் சிறந்த அனுபவத்தைப் பெறுவார்கள்.
வாடிக்கையாளர்களுக்குத் தேவைப்படும் எல்லா வகையான பொருள்களையும் ஒரே கூரையின் கீழ் வழங்கும் ஆர்பிகோ சுப்பர் சென்டரின் வாக்குறுதிக்கு அமைய, சுப்பர் சென்டர்கள் அனைத்தும் வெவ்வேறு தரப்பு வாடிக்கையாளர்களின் வாழ்க்கை முறைகளுக்கு ஏற்றதாக, விரிவான முறையில் மீள வடிவமைக்கப்பட்டுள்ளன.
இலத்திரனியல் சாதனங்களுக்கென பிரத்தியேகமான ஓர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு சம்சுங், பனசொனிக், சொனி, பிலிப்ஸ், பிளக் அன்ட் டெக்கர் போன்ற பிரபல சர்வதேச வர்த்தகப் பெயர்களிலான சாதனங்கள், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட மோர்பி ரிச்சட்ஸ் என்ற ஐரோப்பிய வர்த்தகப் பெயரிலான சாதனங்களும் சர்வதேசத் தரம் வாய்ந்த ஆர்பிகோ இலத்திரனியல் சாதனங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
சுப்பர் சென்டர்கள் அனைத்திலும் தரத்திலும் ஒப்பனையிலும் மிகச் சிறந்த ஆர்பிகோ தளபாடங்களுக்கென பிரத்தியேகமான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. உங்கள் இல்லத்துக்கு அல்லது அலுவலகத்துக்குப் பொலிவூட்டக்கூடிய தளபாடங்களை நீங்கள் அங்கு கொள்வனவு செய்யலாம்.
மறுசீரமைக்கப்பட்ட ஆர்பிகோ சுப்பர் சென்டர்களில் வங்கி மற்றும் ATM சேவைகளையும் பெற்றுக்கொள்ளலாம். உங்கள் ஷொப்பிங் அனுபவத்தை மேலும் சுவையானதாக்குவதற்காக அங்கு பேக்கரிகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஹைட் பார்க் கோனரிலுள்ள பிரதான சுப்பர் சென்டரில் பிரபல Urban Kitchen உணவகம் ஒன்றும் Laundromat ஒத்துழைப்புடன் நடத்தப்படும் லோண்டரி ஒன்றும் உள்ளன.
ஆர்பிகோ சுப்பர் சென்டர்கள் வலையமைப்பில் புதிதாக இணைந்துள்ள கேகாலை சுப்பர் சென்டர் ஜூன் மாதத்தில் திறந்துவைக்கப்பட்டதால், அப்பிரதேசத்திலுள்ள மக்களுக்கும் ஆர்பிகோவின் தரமுயர்ந்த சேவைகளைப் பெறும் வாய்ப்புக் கிட்டியுள்ளது.
8 hours ago
21 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
21 Jul 2025