2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

ஆர்பிகோ நீர் பம்பிகள் மீள் அறிமுகம்

Gavitha   / 2016 ஒக்டோபர் 10 , பி.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்பிகோ நீர் பம்பிகள் பல புதிய சிறப்பம்சங்களுடன் அண்மையில் சந்தையில் மீள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான சிறந்த சேவைகளை வழங்குவதுக்கு காண்பிக்கும் அர்ப்பணிப்பு மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஆர்பிகோ டியுரபிள்ஸ் (பிரை​வெட்) லிமிட்டெட் நிறுவனத்தினால் விநியோகிக்கப்படும் ஆர்பிகோ நீர்-பம்பிகளின் மீள் அறிமுகம் தொடர்பில், நீர்கொழும்பு, கிரான்டீசா ஹொட்டலில் அண்மையில் நடைபெற்ற வருடாந்த விற்பனை பிரதிநிதிகள் ஒன்றுகூடல் மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்வில் அறிவிக்கப்பட்டிருந்தது.  

இந்த மீள் அறிமுகம் தொடர்பில் ரிச்சர்ட் பீரிஸ் குழுமத்தின் உள்நாட்டு உற்பத்தி மற்றும் விநியோக பிரிவு, ஆர்பிகோ நீர் பம்பி முகாமைத்துவப் பணிப்பாளர் சுனில் லியனகே கருத்துத் தெரிவிக்கையில், ‘84 வருட வரலாற்றைக் கொண்ட குழுமக் கம்பனி எனும் வகையில்,வாடிக்கை யாளர்களின் தேவைகளை அறிந்து அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் தீர்வுகளை வழங்கி வருவதன் மூலமாக எமது வெற்றிகரமான செயற்பாடு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக மீள அறிமுகம் செய்யப்பட்ட ஆர்பிகோ நீர் பம்பிகள், எமது தயாரிப்புகளை தொடர்ந்தும் மெருகேற்றம் செய்து வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தயாரிப்புகளின் அனுகூலங்களை பெற்றுக் கொடுப்பதற்கு நாம் காண்பிக்கும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் வெளிப்பாடாக அமைந்துள்ளது.

இந்தப் பன்முக மேம்படுத்தல்கள் மூலமாக வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்த முடியும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், வாடிக்கையாளர்களின் மாறிவரும் தேவைகளுக்கமைய தயாரிப்புகளை மேம்படுத்துவது தொடர்பில் நாம் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருகிறோம்” என்றார்.  
ஆர்பிகோ நீர்பம்பி என்பது, உயர் தர இத்தாலிய தொழில்நுட்பத்தைக் கொண்டு மீள அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், உயர் தரமான ஜப்பானிய உதிரிப்பாகங்களைக் கொண்டுள்ளது.

இதன் மூலம் நவீன வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு பரிபூரண தீர்வுகள் வழங்கப்படும். மேலும்,இந்தத் தயாரிப்பானது, நீண்ட காலம் நீடித்து உழைக்கக்கூடிய வகையிலமைந்த நவீன பொறியியல் தொழில்நுட்பமான பிளாஸ்ரிக் இம்பெல்லர் மற்றும் துருப்பிடிக்காத ரொடர் ஸ்ரீல் ஷாவ்ட் கொண்டுள்ளது. இவற்றின் மூலமாக, துரு படியாத நீர் தீர்வை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம். இந்தப் புதிய பம்பியில் அடங்கியுள்ள ஜப்பானிய தொழில்நுட்பம் என்பது,பம்பிகள் இயங்கும் போது எழும் ஒலியின் அளவில் குறைவு ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X