2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

இணைய வழி கொடுப்பனவுகளுக்கு வெகுமதி

A.P.Mathan   / 2015 செப்டெம்பர் 20 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த மூன்று மாத காலத்திக்குள் கொமர்ஷல் வங்கியின் இணைய வழி வசதிகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 1.5 மில்லியன் ரூபா பணப்பரிசிலை வழங்கவுள்ளதாக வங்கி அறிவித்துள்ளது.
இந்தப் பணப்பரிசிலுக்காக 300 வாடிக்கையாளர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். 2015 செப்டெம்பர் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாத காலப்பகுதியில் 2500 ரூபா அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை தமது பாவனைப் பட்டியல் கட்டணமாகச் செலுத்தும் வாடிக்கையாளர்களிடம்  இருந்தே இந்த அதிர்ஷ்டசாலிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர் என்று வங்கி அறிவித்துள்ளது.

ரூபா 5000 வீதம் 300 பேர் இந்தப் பணப்பரிசை வெல்லவுள்ளனர். இதற்கான தகுதியைப் பெற தற்போது இணைய வசதிகளைப் பாவிக்கும் வாடிக்கையாளர் ஒருவர் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் மாதம் மூன்று பாவனைப்பட்டியல் கட்டணத்தை செலுத்த வேண்டும். இந்த மூன்று பட்டியல்களினதும் கூட்டுத் தொகை ரூபா 2500 அல்லது அதற்கு மேற்பட்ட தொகையாக இருக்க வேண்டும்.

அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சீட்டிழுப்பு இடம்பெறும். இந்த மாதங்களில் அவற்றுக்கு முந்திய மாதங்களின் கொடுப்பனவுகள் சேர்த்துக் கொள்ளப்படும். வாடிக்கையாளர் வெல்லும் பணப்பரிசு அவர்களது கணக்குகளில் வைப்பிலிடப்படும்.

தொலைபேசி, மின்சாரம், நீர் பாவனை மற்றும் கட்டண தொலைபேசி என்பனவற்றுக்கான கட்டணங்களே இந்தத் திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படும்.

கொமர்ஷல் வங்கியின் இணைய வழி சேவையானது தொலைபேசி, மின்சாரம், நீர், கடன் அட்டை, காப்புறுதி, கட்டண தொலைக்காட்சி சேவை, பாடசாலைக் கட்டணங்கள் மற்றும் வரி கட்டணங்கள் என்பன உட்பட ஒன்பது வகைப்படுத்தலின் கீழ் 36 வகை கட்டணங்களை செலுத்த வழியமைக்கின்றது. இவற்றுக்கு மேலதிகமாக வாடிக்கையாளர் தமது சேமிப்பு மற்றும் நடைமுறை கணக்கு, முதலீடு, கடன், கடன் அட்டை, மீதிகளை சரிபார்த்தல், தமது சொந்த கணக்குகளுக்கிடையில் நிதி பரிமாற்றம், நிதி பரிமாற்றத்துக்காக கொமர்ஷல் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் மூன்றாம் நபரை பதிவு செய்து கொள்ளல் என்பனவற்றை எந்த நேரத்திலும் செய்து கொள்ளக் கூடிய வசதிகளை வழங்குகின்றது.

இவை தவிர இணைய சேவை பாவனையாளர்கள் நிலையான வைப்பு, தனியார் கடன் மற்றும் வீட்டுக் கடன் என்பனவற்றுக்கான விண்ணப்பங்கள் திறைசேரி உண்டியல் முதலீடு, பங்கு வர்த்தகக் கொடுப்பனவுகள் என்பனவற்றையும் இந்த மிகவும் பாதுகாப்பான அதி நவீன பாவனைக்கு மிகவும் இலகுவான சிநேகபூர்வ இணைய வழி வசதிகள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

'எமது இணைய வழி சேவை மிகவும் விரிவானதாக உள்ளது. ஒரு சில பொத்தான்களை அழுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளை நிறைவு செய்யக் கூடியதாகவும் உள்ளது' என்று கூறினார் கொமர்ஷல் வங்கியின் இலத்திரனியல் வங்கிப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதான முகாமையாளர் பிரதீப் பந்துவன்ஸ. 'ஈடு இணையற்ற இந்த சேவையையும் வசதிகளையும் பெருமளவானவர்கள் அனுபவித்து அதன் அனுபவங்கள் மற்றும் அனுகூலங்கள் பற்றி அறிந்து கொள்ள வைப்பதே இந்த ஊக்குவிப்புத் திட்டத்தின் நோக்கமாகும்' என்று மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X