2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

இயற்கை நினைவாற்றலை மேம்படுத்தும் KeenMind அறிமுகம்

Gavitha   / 2017 ஜனவரி 17 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான Ceyoka, இந்த முக்கியத்துவத்தைக் கவனத்தில் கொண்டு, KeenMind® (Bacopamonnieri extract CDRI 08®) என்பதை அறிமுகம் செய்துள்ளது. இயற்கையான நினைவாற்றலை மேம்படுத்தும் வகையிலமைந்த இயற்கைத்தயாரிப்பாக இது அமைந்துள்ளது.  

இன்றைய உலகில், நினைவுத்திறனின் தெளிவு மற்றும் மேம்படுத்தப்பட்ட கவனம் என்பன நினைவாற்றல் திறனுக்கு முக்கியமானவையாக அமைந்துள்ளன. வெவ்வேறு ஆய்வுகளின் மூலமாக இயற்கை மூலிகை பிரித்தெடுப்பான “Bacopamonnieri” நினைவாற்றலை சிறுவர்கள் மற்றும் வயது வந்தவர்கள் மத்தியில் ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்தத் தாவரத்தை இலங்கையர்கள் “லுனிவில” என்றழைக்கின்றனர்.  

Ceyoka Health ( Pvt) Ltdஇன் பிரதம நிறைவேற்று அதிகாரி, வைத்தியர் சயிட் கமர் அலி கருத்துத் தெரிவிக்கையில், “நினைவாற்றல் தொடர்பான சுகாதார அனுகூலங்களைப் பெற்றுக்கொடுக்கும் பிரத்தியேகமானத் தயாரிப்பாக KeenMind அமைந்திருக்கும் என நாம் கருதுகிறோம். நினைவாற்றலை மேம்படுத்துவது, கூர்மையானக் கவனிப்பை மேம்படுத்துவது, வயது முதிர்வடைதலுடன் தொடர்புடைய நினைவாற்றல் இழப்பை இல்லாமல் செய்வது மற்றும் பயிலல் தக்க வைப்பு ஆகியவற்றை ஊக்குவிக்க இந்தத் தயாரிப்பு உதவியாக அமைந்துள்ளது. Ceyoka ஊடாக வாடிக்கையாளர்களுக்கு, விநியோகப்படுத்த இப்பாதுகாப்பான மூலிகை மருத்துவத் தயாரிப்பு குறித்த தேவைகளை நிவர்த்தி செய்யும்” என்றார்.  

KeenMindஆனது சுவிட்சர்லாந்தில் SFI எனும் உலக மயமான இயற்கை மருத்துவத் தயாரிப்பு நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படுகிறது. இலங்கையில், இத்தயாரிப்புக்கு ஏக விநியோகஸ்த்தராக Ceyoka திகழ்கிறது.  

SFI தெற்காசியாவுக்கானச் செயற்றிட்ட முகாமையாளர் வைத்தியர். திலீப் கோஷ் கருத்துத்தெரிவிக்கையில், “Ceyoka உடன் உறுதியான உறவை ஏற்படுத்தியுள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். புதியத் தயாரிப்புகளை வடிவமைத்து நோயாளர்களின் தீர்க்கப்படாத தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும், அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியர்களுக்கு மற்றும் காப்புரிமையைப் பேணி புதிய மற்றும் புத்தாக்கமான தயாரிப்புகளை பேண காண்பிக்கும் SFIஇன் அர்ப்பணிப்பானச் செயற்பாட்டுக்கு KeenMind என்பது சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X