Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 ஜனவரி 20 , மு.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீர்கொழும்பு நவலோக வைத்தியசாலை தனது இரண்டு ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடியுள்ளது. மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள பல சிரமங்களின் மத்தியில் கொழும்புக்கு பிரயாணம் செய்யவேண்டிய தேவையைப் போக்கி, நவலோகவின் முதலாவது பிராந்திய வைத்தியசாலையாக ஆரம்பிக்கப்பட்ட இந்த வைத்தியசாலை, அப்பிராந்தியத்திலுள்ள சமூகங்களுக்கு நற்பயனை ஏற்படுத்தியுள்ளதுடன், சுகாதாரப் பராமரிப்பில் புதிய அத்தியாயம் ஒன்றுக்கும் வழிகோலியுள்ளது. அதிநவீன வசதிகளைக் கொண்டுள்ள இந்த வைத்தியசாலை தனது இரண்டாவது ஆண்டு பூர்த்தியைக் கொண்டாடும் வகையில், மகப்பேற்றுப் பிரிவில் முதலாவது மற்றும் 400ஆவதாகப் பிறந்த குழந்தைகளுக்கு அன்பளிப்புப் பரிசுகளையும் வழங்கியுள்ளது.
“இரு வருடங்கள் என்ற மிகவும் குறுகிய காலப்பகுதியில் சமூகத்தின் உள்ளங்கமாக நாம் மாறியுள்ளதை மிகவும் பெருமையுடன் குறிப்பிடுகின்றேன். சுகாதாரப் பராமரிப்பினை சௌகரியமானதாகவும், நம்பகமானதாகவும் மற்றும் நியாயமான கட்டணங்களில் பெற்றுக்கொள்ளக்கூடியதாகவும் ஆக்க எம்மால் முடிந்துள்ளது” என்று நவலோக ஹொஸ்பிட்டல்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரான ஜெயந்த தர்மதாச குறிப்பிட்டார்.
70 படுக்கை அறைகள், அதிநவீன வசதிகள், மூன்று சத்திரசிகிச்சைக்கூடங்கள், உயர் தகைமை கொண்ட பணியாளர்கள் மற்றும் அப்பிரதேசத்தில் 24 மணி நேரமும் மருத்துவ சிகிச்சையை வழங்கும் ஒரேயொரு அவசர சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றைக் கொண்டுள்ள இந்த வைத்தியசாலை, அப்பிராந்தியத்தில் நவீன மருத்துவ சிகிச்சையைப் பொறுத்தவரையில் ஒரு கலங்கரை விளக்கமாக மாறியுள்ளது.
பிரத்தியேக மருத்துவ அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் அவசர சத்திரசிகிச்சைப் பிரிவுகள் அடங்கலாக, தொழில்நுட்பரீதியாக மிகவும் நவீன அவசர மருத்துவ சிகிச்சைப் பிரிவை இந்த வைத்தியசாலை கொண்டுள்ளது. CT மற்றும் Ultrasound ஸ்கானிங் வசதி, ECG, பிஸியோதெரபி, பற் சோதனை மற்றும் சிகிச்சை சேவைகள் மற்றும் அனைத்து வசதிகளையும் கொண்ட Dialysis சிகிச்சை மையம் அடங்கலாக நோயைக் கண்டறியும் மற்றும் அதற்கு உரிய சிகிச்சைகளை வழங்குவதற்கான பல்வேறு வகையான சேவைகள் இங்கே கிடைக்கப்பெறுகின்றன.
வைத்தியசாலை தொழிற்பட ஆரம்பித்து இரு வருடங்களில், அப்பிராந்தியத்திலுள்ள மக்களுக்கு உலகத்தரம்வாய்ந்த மருத்துவப் பராமரிப்புச் சேவைகளை வழங்கவேண்டும் என்ற முயற்சிகளின் ஒரு பகுதியாகப் பிரத்தியேகமான சிறுநீரக சிகிச்சைப் பிரிவொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையிலுள்ள பிரபலமான சிறுநீரக வைத்திய சிகிச்சை நிபுணர்களின் அணி மற்றும் சிறுநீரக சிகிச்சை முறைகள் அனைத்தையும் கையாளும் விதத்தில் அனைத்து நவீன வசதிகளையும் கொண்டுள்ள நடைமுறைகளின் இணைப்பை இப்பிரிவு கொண்டுள்ளது.“இப்பிராந்தியத்தில் எமது வசதிகள் மற்றும் பணியாளர்கள் தொடர்பில் நாம் தொடர்ந்தும் முதலீடுகளை மேற்கொண்டுவரும் நிலையில், எமது வெற்றிகரமான தொழிற்பாடுகளின் அடிப்படையில், இதே சேவைகளை நாட்டில் ஏனைய பகுதிகளுக்கும் விஸ்தரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்” என்றார்.
32 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
42 minute ago