Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 செப்டெம்பர் 29 , மு.ப. 08:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை தேசிய வைத்தியசாலைக்கு MRI இயந்திரமொன்றை ஜப்பானிய தூதரகம் கையளித்திருந்தது. இந்நிகழ்வில் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதில் சுகாதாரத் துறை அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல அடங்கியிருந்தார். இரு நாடுகளுக்குமிடையே ஆழமான பிணைப்பை வெளிப்படுத்தியிருந்ததுடன், இலங்கையின் சுகாதார பராமரிப்பு கட்டமைப்பை வெளிப்படுத்துவதற்கான திரண்ட அரப்பணிப்பையும் உறுதி செய்திருந்தது.
ஜப்பான் முன்னர் CT ஸ்கானர் இயந்திரமொன்றையும் இதர மருத்துவ சாதனங்களையும் தேசிய வைத்தியசாலைக்கு கடந்த ஒக்டோபர் மாதத்தில் கையளித்திருந்தது. இலங்கையில் படங்களினால் இனங்காணல் ஆற்றல்களை வெளிப்படுத்தும் வகையில் இந்த சாதனம் அமைந்திருந்தது. இந்த நவீன உள்ளம்சங்களின் உள்ளடக்கங்களுடன், தேசிய வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படும் மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புதிய கையளிப்பு வழங்கும் நிகழ்வினூடாக வழங்கப்பட்ட ஜப்பானின் சாதனத்துக்கு, “ஜப்பான் – இலங்கை நட்புறவு இனங்காணல் படக் கட்டமைப்பு” என பெயரிடப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்குமிடையே துரித நட்புறவை கட்டியெழுப்புவதற்கான சக்தி வாய்ந்த எடுத்துக்கட்டாக அமைந்துள்ளது.
ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி கருத்துத் தெரிவிக்கையில், “இரு நாடுகளுக்குமிடையிலான நீண்ட காலம் நிலைத்திருக்கும் அடையாளமாக ஜப்பான் – இலங்கை நட்புறவு இனங்காணல் படக் கட்டமைப்பு அமைந்துள்ளது. இலங்கை மக்களுக்கு தரமான சேவைகளை மேம்படுத்திக் கொடுப்பதில் இந்த நிலையம் முக்கிய பங்காற்றும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். இந்த நவீன வசதிகள் படைத்த மருத்துவ வசதிகளினூடாக இலங்கை மக்களின் உயிர்களைக் காப்பது மாத்திரமன்றி, அவர்களின் நலனை மேம்படுத்துவதிலும் பங்களிப்பு வழங்குவதாக அமைந்திருக்கும்.” என்றார்.
ஜப்பான் மற்றும் இலங்கை இடையே உறுதியான பங்காண்மையை ஏற்படுத்திக் கொடுப்பதில் இந்த நிகழ்வு முக்கிய பங்காற்றியிருந்ததுடன், நாட்டின் சுகாதார பராமரிப்பு சேவைகளை மேம்படுத்துவதற்கான ஜப்பானின் ஒப்பற்ற அர்ப்பணிப்பை மீள உறுதி செய்வதாக அமைந்துள்ளது.
11 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
1 hours ago
1 hours ago