Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2020 ஜனவரி 07 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரு சக்கர மற்றும் முச்சக்கர வண்டிகள் உற்பத்தியாளரான TVS மோட்டர் கம்பனி, இலங்கையில் TVS NTORQ 125 Race Edition ஐ அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய Race Edition மாதிரியில், கண்கவர் LED DRLs மற்றும் முன்புற LED விளக்கு காணப்படும். மேலும், இந்த தெரிவில் Hazard விளக்கும் உள்ளடக்கப்பட்டுள்ளது, இதனை சிவப்பு நிற hazard சுவிட்ச் ஊடாக இயக்க முடியும். கண்கவர் chequered flag கிராஃபிக்ஸ் உருவமைப்புடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய தெரிவில், ‘Race Edition’ இலச்சினை பொறிக்கப்பட்டுள்ளது. மூன்று வர்ணத் தெரிவுகளான matte black, metallic black, metallic red ஆகியவற்றில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் புகழ்பெற்ற Bluetooth இணைப்புத்திறனைக் கொண்ட TVS NTORQ 125 உயர் வினைத்திறனை வழங்குவதாகவும், கண்கவர் தோற்றம், நவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்டதாக அமைந்துள்ளது. இந்த ஸ்கூட்டர் TVS Connect உடன் இணைக்கப்பட்டுள்ளதுடன், race edition பாவனையாளர்களுக்கு விசேட பாவனையாளர் அனுபவத்தை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். 2018 செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட TVS NTORQ 125, அதன் இலக்கான Gen Z தலைமுறை வாடிக்கையாளர்களிடமிருந்து பெருமளவு வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஸ்கூட்டர் நவீன CVTi-REVV 124.79cc, single-cylinder, 4-stroke, 3-valve, air-cooled SOHC என்ஜினை கொண்டுள்ளது. இதனூடாக 6.9kW@7500 rpm / 9.4 PS @7500 rpm, 10.5 Nm@5500 rpm திறன் வெளிப்படுத்தப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
20 minute ago
35 minute ago