Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 27 , மு.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை வங்கித் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி திரு.ரொணால்ட் சீ பெரேரா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமது கடமைகளை கடந்தவாரம் பொறுப்பேற்றார். முன்னர் பெரேரா 28.01.2015 தொடக்கம் 18.11.2018 வரை இலங்கை வங்கித்தலைவராக கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு புனித ஜோசப் கல்லூரியில் கல்வி கற்ற இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பீ.பட்டதாரியும் நோர்த்உம்ரியா பல்கலைக்கழகத்தில் சர்வதேச வியாபாரச் சட்டத்தில் எல்.எல்.எம்.பட்டத்தையும் பெற்றுள்ளார். பெரேரா, 2012ல் ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டார். இவர் முன்பு இலங்கை வங்கிப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
பெரேரா மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் அதிஉயர் நீதிமன்றம் ஆகியவற்றில் போன்றே ஆரம்ப நீதிமன்றங்களில் பரந்த சேவையாற்றி அனுபவமிக்க சட்டத்தரணியாவார். இவர் குடியியல் மற்றும் குற்றவியல் வழக்குகள், பேரம்பேசுதல், வர்த்தக மற்றும் போக்குவரத்து ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள் வரைபிடல் ஆகியவற்றில் ஆழ்ந்த அனுபவம் கொண்டவர்.
இவர் வர்த்தகச் சட்டம், வங்கியியல் சட்டம், கைத்தொழில் சட்டம், தடை உத்தரவுகள், அவவாறு, தேர்தல் மனுக்கள், குடியியல் முறையீடுகள், திருத்துதல் விண்ணப்பங்கள், ரிட் விண்ணப்பங்கள், அடிப்படை உரிமை வழக்குகள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றுள்ளார். இவற்றுக்கு மேலதிகமாக இவர் பல வர்த்தக வழங்குத்தீர்த்தல்களிலும் ஈடுபட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .