Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 21 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை வங்கி வாடிக்கையாளர்கள் கொடுக்கல் வாங்கல்களை மேலும் எளிமைப்படுத்தும் வகையில் புதிய BOC SmartPay- QR அடிப்படையிலான கொடுப்பனவுத் தீர்வையை அறிமுகம் செய்துள்ளது. வங்கியால் வழங்கப்படும் டிஜிட்டல் தீர்வுகளில் புதிய உள்ளடக்கமாக இது அமைந்துள்ளது. வங்கியின் பணமில்லா, கடதாசியில்லா மற்றும் கிளைகளுக்கு விஜயமில்லாத கொடுப்பனவுக் கட்டமைப்பில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அங்கமாக இது அமைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியால் அறிமுகம் செய்யப்பட்ட தேசிய QR குறியீடான LANKAQR குறியீட்டை பயன்படுத்திக் கொடுக்கல் வாங்கல்களை BOC SmartPay அறிமுகம் செய்துள்ளது.
நாட்டினுள் உடனடி கொடுக்கல் வாங்கல்களை நிறைவேற்றும் வகையில் இந்த தீர்வு அமைந்துள்ளது. நடைமுறை மற்றும் சேமிப்பு கணக்குகள் வைத்திருப்போர், தமது திறன்பேசிகளினூடாக, LANKAQR சான்றளிக்கப்பட்ட விற்பனை நிலையங்களில் கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியும்.
SmartPay appஐ எளிமையான பதிவு செய்தல் முறையினூடாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இதே appஇனூடாக இலங்கை வங்கி வாடிக்கையாளர்களுக்கு, விற்பனையாளர்களாக பதிவு செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகின்றது. அருகிலுள்ள இலங்கை வங்கி கிளைக்கு விஜயம் செய்து இதை செயற்படுத்திக் கொள்ள முடியும்.
BOC SmartPay ஊடாக வாடிக்கையாளர்களுக்கு அட்டையில்லாத மற்றும் பணமில்லாத கொடுப்பனவுகளை தமது தினசரி கொடுப்பனவுகளை மேற்கொள்ள பயன்படுத்த முடியும்.
சௌகரியம், எளிமை மற்றும் வேகம் ஆகியவற்றை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இது சிறந்த தீர்வாக அமைந்திருக்கும். வாடிக்கையாளரால் செயற்படுத்தப்படும் கொடுப்பனவு முறை என்பதால், தவறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு.
BOC SmartPay இனால் வாடிக்கையாளர்களுக்கு நட்பான சேவைகள் கணக்கு மீதி, மினி அறிக்கைகள் மற்றும் விவரமான கொடுக்கல், வாங்கல், அலேர்ட்கள் ஆகியவற்றுடன் உயர் மட்ட பாதுகாப்பு உள்ளம்சங்கள் போன்றன வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.
டெபிட் அட்டைகள், கிரெடிட் அட்டைகள், ஏனைய வங்கி நடைமுறை மற்றும் சேமிப்பு கணக்குகள் போன்றவற்றை இந்த கொடுக்கல் வாங்கல் கட்டமைப்பில் உள்ளடக்க வங்கி திட்டமிட்டுள்ளது. இதனூடாக வாடிக்கையாளர்களின் தேவைகளை மேலும் நிறைவேற்றக்கூடியதாக இருக்கும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
28 minute ago
30 minute ago
56 minute ago