Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S.Sekar / 2021 ஜூலை 03 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் 182ஆவது வருடாந்த பொது ஒன்றுகூடலின் போது, அதன் புதிய தவிசாளராக விஷ் கோவிந்தசாமி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த அமைப்பின் தவிசாளராக இரு வருட காலம் செயலாற்றியிருந்த கலாநிதி. ஹான்ஸ் விஜேசூரியவின் பதவிக் காலம் நிறைவுக்கு வந்ததை தொடர்ந்து, அந்த நிலைக்கு கோவிந்தசாமி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் முகாமைத்துவ பணிப்பாளராக கோவிந்தசாமி செயலாற்றுவதுடன், வட்டவளை பிளான்டேஷன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் செயலாற்றியிருந்தார்.
இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் உப தலைவராக ஏர்னஸ்ட் அன்ட் யங் சிரேஷ்ட பங்காளரும் வரிப் பிரிவின் தலைமை அதிகாரியுமான துமிந்த ஹுலன்கமுவ ஆகியோர் நியமிக்கப்பட்டதுடன், பிரதி உப தவிசாளராக ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் தவிசாளர் கிரிஷான் பாலேந்திரா நியமிக்கப்பட்டார்.
இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பணிப்பாளர் சபை அங்கத்தவர்களாக ஜெட்விங் ட்ராவல்ஸ் தலைமை அதிகாரியும் முகாமைத்துவ பணிப்பாளரும், ஜெட்விங் ஹோட்டல்ஸ் தலைமை அதிகாரி ஷிரோமால் கூரே, காகில்ஸ் ஃபுட் கம்பனி முகாமைத்துவ பணிப்பாளரும், காகில்ஸ் (சிலோன்) பணிப்பாளருமான அசோக பீரிஸ் மற்றும் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் செயலாளர் நாயகமும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஞ்சுள டி சில்வா ஆகியோர் மீளத் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
ஹேலீஸ் குழுமத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சரத் கனேகொட, லயன் பிரெவரி சிலோன் தவிசாளரும் சிலோன் பெவரேஜ் ஹோல்டிங்ஸ் தவிசாளருமான அமல் கப்ரால் மற்றும் ஸ்டான்டர்ட் சார்ட்டட் வங்கி பிரதம நிறைவேற்று அதிகாரி பிங்குமல் தேவதந்திரி ஆகியோர் பணிப்பாளர் சபைக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்டனர்.
தமது பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு கோவிந்தசாமி குறிப்பிடுகையில், இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் இந்த உயர் பொறுப்பை ஏற்றுக் கொள்வதையிட்டு மகிழ்ச்சியையும் பெருமையையும் கொள்கின்றேன். பணிப்பாளர் சபை, செயலகத்துடன் இணைந்து செயலாற்ற எதிர்பார்க்கின்றேன். தேசத்துக்கு முக்கியத்துவம் எனும் வழிமுறையை பின்பற்றி தனியார் துறையின் நலன் தொடர்பில் கவனம் செலுத்த எதிர்பார்க்கின்றேன். இந்த அமைப்பினால் முன்னெடுக்கப்படும் சிறந்த செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்க்கின்றேன். 183 வருட கால வரலாற்றைக் கொண்ட இந்த அமைப்பின் வரலாற்றில் முதல் தடவையாக மெய்நிகரான முறையில் பொறுப்பை ஏற்றுள்ள நான், எனது ஆற்றலின் உச்ச கட்டத்துக்கமைய சேவையாற்ற எதிர்பார்க்கின்றேன்.” என்றார்.
10 minute ago
20 minute ago
36 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
20 minute ago
36 minute ago
47 minute ago