2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

இலங்கையரின் தனித்த அழகினை வெளிக்கொணர உதவும் Basicare

A.P.Mathan   / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

முகம், உடல் மற்றும் கூந்தல் சம்பந்தப்பட்ட புதுமையான அழகு சாதனங்கள் மற்றும் உபகரணங்களை வழங்கிவரும் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமான Basicare நிறுவனம் உள்நாட்டு அழகு மீதான ஆர்வத்தை அடிப்படையாக வைத்து தீர்வுகளை வழங்கி வருகிறது.

தொழிற்துறை மற்றும் சில்லறை அழகு பராமரிப்பு சந்தையில் பங்காளராக திகழும் Basicare உற்பத்திகள் ஐக்கிய அமெரிக்கா, பிரான்ஸ், இந்தியா, கொரியா, தாய்வான், ஹொங்கொங், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் உள்ளிட்ட 38 உலக நாடுகளில் கிடைக்கின்றன.

'கடந்த 14 வருடங்களுக்கு முன்னர் 6 ஊழியர்களுடன் ஐக்கிய அமெரிக்காவில் Basicare நிறுவனத்தை நாம் தொடங்கினோம். எமது முந்தைய தொழிற்துறை அனுபவம் மிகவும் பயனுடையதாக அமைந்துள்ளது. இன்றைய போட்டிமிக்க சூழலிலும் உலகம் முழுவதுமுள்ள 38 வெவ்வேறு சந்தைகளிலும் நாம் செயற்பட்டு வருவதுடன், 'திருப்திக்கான உத்தரவாதம்' எனும் எமது கொள்கையானது மகத்தான வெற்றிக்கான கதவுகளை திறந்து விட்டுள்ளது' என Basicare உற்பத்தி, Influx Inc இன் முகாமைத்துவ பணிப்பாளர் சாம் கொலோன்னே தெரிவித்தார்.

சருமம் மற்றும் அழகு பராhமரிப்பு துறையில் இலங்கையில்; பரந்தளவிலான அழகுசாதன பொருட்களை வழங்கிவரும் முன்னோடியான DermaCare (பிரைவற்) லிமிடெட் நிறுவனத்தின் மூலம் Basicare சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது.

'இலங்கையர் எனும் ரீதியில் உற்பத்திகளை இங்கு வரவழைக்க விரும்பினேன். Dermacare ஊடாக சுமார் ஒரு தசாப்தமாக நாம் வெற்றியீட்டி வருவதுடன், எமது உற்பத்திகள் பரந்துபட்ட சில்லறை காட்சியறைகளிலும் விநியோகிக்கப்பட்டு வருகிறது' என மேலும் அவர் தெரிவித்தார்.

இலங்கையின் நவநாகரீக பெண்கள் மற்றும் ஆண்களை இலக்கு வைத்து, அழகுசாதன உபகரணங்கள், மெனிகியுர் மற்றும் பெடிகியுர், பாத் அன்ட் பொடி, பரிசுகள் மற்றும் கருவிகள் உள்ளடங்களாக அதன் உற்பத்தி தெரிவுகளை உள்நாட்டு வர்த்தக வளாகங்கள் மற்றும் மருந்தகங்களில் காட்சிப்படுத்துவதனுடாக Basicare வரம்புகள் வளர்ச்சியடைந்து வருகின்றன.

'சுகாதாரம் மற்றும் சருமத்தை மேம்படுத்தக்கூடிய மிகச்சிறந்த உபகரணங்களை Basicare கொண்டுள்ளதுடன், தமது வாழ்க்கையை வளமாக்குவதற்காக அவற்றை வாடிக்கையாளருக்கு கிடைக்கப் பெறச்செய்வதே எமது எதிர்பார்ப்பாகும்' என கொலோன்னே தெரிவித்தார்.

Basicareஇன் கடந்தகால அபிவிருத்தி குறித்து கருத்து தெரிவித்த கொலோன்னே, 'கடந்த காலங்களில் சந்தையில் காணக்கிடைக்காத பல புதுமையான உற்பத்திகளை நாம் வழங்கியிருந்தோம். வாடிக்கையாளர்களின் தேவைக்களுக்கமைய நாம் சேவையாற்றி வரும் வெவ்வேறு பிரிவுகள் ஊடாக சந்தை மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் ஏற்கனவே உள்ள உற்பத்திகளை விட உற்பத்தி வடிவமைப்பை நாம் தனிப்பயனாக்கி வருகிறோம்' என்றார்.

'இலங்கை சந்தையில் பெரும்பாலான மக்கள் வெவ்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இருப்பினும், உற்பத்தி தொடர்பான தகவல்கள் நுகர்வோருக்கு மிகக்குறைவாகவே வழங்கப்படுகிறது. Basicare ஆனது உற்பத்தி தொடர்பான தகவல்கள், செயல்முறைகள் மற்றும் அவை எங்கிருந்து வருகின்றன போன்ற தகவல்களை வாடிக்கையாளருக்கு வழங்கி வருகிறது. எனவே இதனூடாக மக்கள் உறுதியான பலன்களையும், தங்களது அழகு அபிலாஷைகளை எவ்வாறு நிவர்த்தி செய்யும் என்பது தொடர்பிலும் அறிந்துகொள்ள முடியும்' என கொலோன்னே தெரிவித்தார்.

மக்களின் வாழ்வை அழகு மேம்படுத்துகிறது எனும் வலுவான நம்பிக்கையுடன் Basicare ஆனது ஒவ்வொருநாளும் அழகின் சக்தியை வெளிப்படுத்துவதில் செயற்பட்டு வருகிறது. 'எமது உற்பத்திகள் செயற்திறன் வாய்ந்தவையாக உள்ளதுடன், அசைக்கமுடியாத தரத்துடன் சகாயமான விலைகளில் மிகச்சிறந்த உற்பத்திகளை நாம் வழங்கி வருகிறோம்' என கொலோன்னே குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X