Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 நவம்பர் 28 , பி.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிலைபேறாண்மைக்கு நீண்ட காலமாக தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி வரும் EFL, தனது சூரிய வலு மையத்தை வெல்லம்பிட்டியில் அமைந்துள்ள அலுவலகத்தில் அண்மையில் அங்குரார்ப்பணம் செய்திருந்தது.
மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி பிரதி அமைச்சர் அஜித் பி.பெரேரா இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். அவருடன், EFL உயரதிகாரகள் மற்றும் எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பிஎல்சி குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹனிஃவ் யூசுஃவ் ஆகியோரும் கலந்து கொண்டனர். பொது மின்வழங்கல் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ள EFL சூரிய வலு மையத்தை அமைச்சர் அங்குரார்ப்பணம் செய்திருந்ததுடன், இலங்கையின் மின் வலுப்பிரசினைக்கு தீர்வு காணும் வகையில், தனியார் நிறுவனமொன்று முன்னெடுக்கும் இந்தச் செயற்பாட்டுக்கு, பூரண ஆதரவை வழங்குகின்றமைக்குப் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
மொத்தமாக 2,326 சூரிய படல்கள் நிறுவப்பட்டுள்ளதுடன், மாதமொன்றில் 78,154 கிலோவாற் மணித்தியால வலுவை வழங்கும் திறன் கொண்டது என மதிப்பிடப்பட்டுள்ளது. மணித்தியாலமொன்றில் 651.28 கிலோவாற் வலு உற்பத்தி திறனை இது கொண்டுள்ளது. நாட்டில் காணப்படும் இரண்டாவது மாபெரும் கூரைமேலமைந்த சூரிய மின் உற்பத்தி கட்டமைப்பாக இது அமைந்துள்ளது. இந்த சூரிய மின்வலு கட்டமைப்பு, தேசிய மின் உற்பத்தி கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளமையின் காரணமாக, எரிபொருள் மற்றும் நிலக்கரி மின் உற்பத்தியில் இலங்கை தங்கியிருப்பதைக் குறைத்துள்ளது. நாட்டின் வலுத்துறைக்கு வழங்கப்படும் பங்களிப்புகள் பலதில் ஒன்றாக இது அமைந்துள்ளதுடன், நிலைபேறான செயற்பாடுகள் மற்றும் சூழல் மற்றும் செயற்பாடுகளில் சரக்கு கையாளல் பங்களிப்பை வழங்குவதாகவும் அமைந்துள்ளது.
நவீன வசதிகள் படைத்த நவநாகரீக மற்றும் பொது களஞ்சியத் தொகுதிக்கு முதலாவது LEED Gold சான்று வழங்கப்பட்டுள்ளதுடன், ISO 14062 சான்றையும் பெற்றுள்ளது. தமது பச்சை வீட்டு வாயு வெளியீடுகளை அளவிடவும், அறிக்கையிடவும் இந்தத் தரப்படுத்தல்களையும் சான்றுகளையும் பெற்றுள்ளது. சமூகத்துக்காக இந்த நிறுவனம் அண்மையில் வருடாந்த மின்குமிழ்கள் வழங்கும் செயற்றிட்டத்தையும் முன்னெடுத்திருந்தது. இதன் போது பழைய இழைகளைக் கொண்ட மின்குமிழ்களுக்கு பதிலாக, LED மின்குமிழ்களை இலவசமாக விநியோகித்திருந்தது.
EFLன் முகாமைத்துவப் பணிப்பாளர், சயிஃவ் யூசுஃவ் கருத்துத் தெரிவிக்கையில், “சூரிய மின் வலு பிறப்பிப்புக்கு எமது பங்களிப்பு என்பது முதல் படியாக அமைந்துள்ளதுடன், எதிர்காலத்துக்கான வழிகாட்டலாக அமைந்துள்ளது. நிலைபேறாண்மை தொடர்பில், நாம் கொண்டுள்ள நோக்கத்துக்கமைவாக, எமது சகல பங்களிப்பையும் பூர்த்தி செய்துள்ளது. இலங்கையில் ஒரு நாடு எனும் வகையில், நேர்த்தியான வெளிப்படுத்தல் திறன் என்பதில் நாம் உறுதியான தூர நோக்கை கொண்டுள்ளோம். எமது வலுத்தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள, இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதில் நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .