Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 நவம்பர் 23 , பி.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
Huawei மற்றும் சிங்கர் ஸ்ரீ லங்கா ஆகியன ஒன்றிணைந்து, கொழும்பில் சிங்கர் Lifestyle Festival கண்காட்சியில் வைபவ ரீதியாக புத்தம் புதிய Huawei GR5 2017 திறன்பேசியை அறிமுகம் செய்துள்ளன. Huawei Sri Lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஷண்லி வாங், இலங்கையில் Huawei சாதனங்களுக்கான பொது முகாமையாளரான கல்ப பெரேரா, சிங்கர் பிஎல்சி குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான அசோக பீரிஸ் மற்றும் சிங்கர் ஸ்ரீ லங்கா பிஎல்சி நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின் பணிப்பாளரான குமார் சமரசிங்க மற்றும் சிங்கர் ஸ்ரீ லங்கா பிஎல்சி நிறுவனத்தில் Huawei இன் வர்த்தகநாம முகாமையாளரான சஹான் பெரேரா ஆகியோர் இந்த அறிமுக நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர். தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் இலங்கையிலேயே GR5 2017 முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
G உற்பத்தி வரிசையில் புத்தம் புதிதாக இணைந்துள்ள இப்புதிய திறன்பேசி, தொழில்நுட்ப அம்சங்களில் எவ்விதமான குறைவுகளுமின்றி, நவநாகரீக வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. இரட்டை கமரா மற்றும் நவீன தொழில்நுட்ப மேம்பாடுகளை உபயோகிக்கும் விரல் அடையாள உணரி (சென்சர்) தொழில்நுட்பம் அடங்கலாகப் பல்வேறுத் தெரிவுகளுடனான அனுகூலங்களுடன், ஈடுஇணையற்ற விலைகளில் வாடிக்கையாளர்கள் தற்போது திறன்பேசி ஒன்றைக் கொள்வனவு செய்ய முடியும்.
இலங்கையில் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள இந்த தயாரிப்புத் தொடர்பில் இலங்கையில் Huawei சாதனங்களுக்கான உள்நாட்டு தலைமை அதிகாரியான ஹென்றி லியு கருத்து வெளியிடுகையில், “பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட, தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட சாதனமே இப்புதிய அறிமுகம். ஈடிணையற்ற விலைகளில் தரமான மற்றும் சௌகரியமான திறன்பேசி சாதனங்களை அறிமுகப்படுத்திவருகின்ற Huawei இன் ஸ்தானத்தை இது மேலும் புலப்படுத்துகின்றது. GR5 2017இன் அறிமுகத்தை பிராந்தியத்திலேயே முதன்முதலாக அனுபவிக்கப்பெற்ற நாடாக இலங்கை மாறியுள்ளது என்பதை பெருமையுடன் அறிவிக்க விரும்புகின்றோம். உயர் தரம் கொண்ட இந்த திறன்பேசி, இரட்டை கமரா மற்றும் விரல் அடையாள உணரி (சென்சர்) தொழில்நுட்ப அம்சங்கள் போன்ற புத்தாக்கங்களுடன் பன்முகப்பட்ட மற்றும் உயர் தர சாதனத்தை அனுபவிக்க விரும்புகின்ற அனைவருக்கும் பயனளிக்கும்” என்று குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .