Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 ஜனவரி 03 , பி.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
Charter House International, உலகளாவில் பெயர்பெற்ற INDA குளியலறைச் சாதனங்களுக்கு இலங்கையில் ஏகபோக விநியோகத்தராகத் திகழ்ந்து வருகின்றது. 70 ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலியில் ஸ்தாபிக்கப்பட்ட INDA, உலகப் போருக்குப் பின்னரான பொருளாதார எழுச்சி இடம்பெற்றக் காலகட்டத்தில், குளியலறைச் சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாகத் தொழிற்பட ஆரம்பித்தது. அதற்குப் பிறக்கு வந்த ஆண்டுகளில் குளியல் சுவர்கள், பொருத்தல் மூலங்கள் மற்றும் நிலைக்கண்ணாடிகள் போன்ற ஏனைய உற்பத்தி வரிசைகளையும் உற்பத்தி செய்ய ஆரம்பித்தது. குளியலறைத் தொடர்பான வரையறையற்றப் பொருத்தல் தீர்வுகளை வழங்கும் தனித்தவொரு எண்ணக்கருவாக மாற்றம் கண்டது.
தற்போது, குளியலறைச் சாதனத் துறையில் ஒரு தொழிற்றுறைக்கு குழுமமாக INDA திகழ்ந்துவருவதுடன், சர்வதேச சந்தைகளில் உறுதியான, முன்னணி ஸ்தானத்தை வகித்து வருகின்றது. குளியலறைச் சாதனங்கள் பொருத்தல் மூலங்கள், குளியல் சுவர்கள் மற்றும் நிலைக்கண்ணாடிகள் ஆகிய நான்கு பிரிவுகளில் அதன் உற்பத்திகளை வழங்கி வருகின்றது.
INDA வடிவமைப்பு பல்வேறு அம்சங்களிலும் அதி சிறப்பு வாய்ந்தது. தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற புத்தாக்கம், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மீதான பாரிய முதலீடுகளின் பலனாக, பாரம்பரிய வடிவம் முதல் அதி நவீன வடிவமைப்புக்கள் வரை நவீன தீர்வுகளை் கவர்ச்சியான வடிவமைப்புக்களில் INDA அறிமுகப்படுத்தி வருகின்றது. இந்த பன்முக அம்சங்களை உள்ளடக்கிய தனிச்சிறப்பானது, தனிமுத்திரைப் படைத்த படைப்பாக்கத்திறன், அசல் வடிவம் மற்றும் அதிசிறப்பான தோற்றம் ஆகியவற்றுடன் இணைந்து பிரமிக்கச் செய்கின்றது.
பிறையோஷி, சிட்டேரியோ மற்றும் டூன் போன்ற உலகப்புகழ்பெற்றக் கட்டடக் கலைஞர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களின் தீவிரமானப் பங்களிப்புடன் வடிவமைக்கப்படும் INDA உற்பத்திகள் தனித்துவம் வாய்ந்தவை. வாடிக்கையாளர்களின் வெவ்வேறுபட்டத் தேவைகளுக்கு அமைவாக, அவர்களின் விருப்பத் தெரிவுகள் மற்றும் மாற்றமடைந்து வருகின்ற தேவைகளை தொடர்ச்சியாக வழங்கும் திறன் ஆழமாக வேரூன்றியுள்ள INDA, நீண்ட கால அனுபவத்தைக் கொண்டுள்ளது.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago