Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 ஜனவரி 20 , மு.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் முதல் தடவையாக, Xiaomi வர்த்தக நாமத்திலமைந்த அலைபேசிகளை Cellcity லங்கா அறிமுகம் செய்யவுள்ளது. 2017 ஜனவரி மாதத்தில் அதன் இரு புகழ்பெற்ற மாதிரிகளான Xiaomi Mi 5 மற்றும் Xiaomi Redmi 3 ஆகியவற்றை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த வர்த்தக நாமம் தற்போது, பெருமளவில் ஒன்லைன் ஊடாக உலகளாவிய ரீதியில் விற்பனை செய்யப்படுவதுடன், Cellcity லங்காவின் விநியோக வலையமைப்பினூடாகவும் இலங்கையில் விற்பனை செய்யப்படவுள்ளது.
உலகளாவிய ரீதியல் நான்காவது மாபெரும் அலைபேசி விற்பனையாளராக Xiaomi திகழ்வதுடன், சீனாவின் முதல் தர அலைபேசி விற்பனையாளராகவும் தரப்படுத்தப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு, முதல் தடவையாக இந்த அலைபேசி அறிமுகம் செய்யப்பட்டிருந்ததை தொடர்ந்து, ஐந்து ஆண்டு காலப்பகுதியில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. தொழில்நுட்ப விரும்பிகளால் பெருமளவு நாடப்படும் நாமமாக அமைந்துள்ள Xiaomi அலைபேசிகள் அவற்றில் காணப்படும் புத்தாக்கமான உள்ளம்சங்கள் மற்றும் நவீன வடிவமைப்பு, விலை ஆகியவற்றின் காரணமாக புகழ்பெற்றுள்ளன. Xiaomi அதன் பரந்தளவுத் தெரிவுகளான, Mi Power Banks, Mi Smart TVS மற்றும் ஸ்மார்ட் சாதனங்களான Mi band, Mi VR மற்றும் Mi head phones போன்றவற்றுக்காகவும் புகழ்பெற்றுள்ளன.
Cellcity லங்கா தற்போது இலங்கையில் Meizu மற்றும் Zigo வர்த்தக நாம அலைபேசிகளை விநியோகிப்பதில் ஈடுபட்டுள்ளது. Boswin உடன் கைகோர்த்து Xiaomi அனுபவத்தை இலங்கைச்சந்தையில் அறிமுகம் செய்ய முன்வந்துள்ளது. இந்த மாதம் முதல், இலங்கையில் பரந்து காணப்படும் Cellcity லங்காவின் விநியோக வலையமைப்பிலிருந்து கொள்வனவு செய்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.
Cellcity லங்கா பணிப்பாளர் உபுல் பெர்னாண்டோ கருத்துத் தெரிவிக்கையில், “Xiaomi என்பது இளமையான ஸ்மார்ட் ஃபோன் வர்த்தக நாமமாகும். சர்வதேச ஸ்மார்ட் ஃபோன், சந்தையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. Xiaomi ஸ்மார்ட் ஃபோன்கள் அவற்றின் தரம் காரணமாக, புகழ்பெற்றுக் காணப்படுகின்றன. பாரம்பரியமற்ற வியாபார கையாள்கைகள் காரணமாக, நுகர்வோருக்கு இந்தத் தயாரிப்புகளை சகாயமான விலைகளில் விற்பனை செய்யக்கூடியதாக உள்ளது. Boswin லங்கா உடன் கைகோர்த்து இலங்கையின் நுகர்வோர் மத்தியில் Xiaomi அலைபேசிகளை அறிமுகம் செய்ய முன்வந்துள்ளதையிட்டு நாம் பெருமையடைகிறோம்” என்றார்.
Boswin பிரைவெட் லிமிட்டெட் பிரதம நிறைவேற்று அதிகாரி பிரசாத் விதானலாகே கருத்துத் தெரிவிக்கையில், “உலகளாவிய ரீதியில் தொழில்நுட்ப ரீதியில் திறன் வாய்ந்தவர்கள் மத்தியில் புகழ்பெற்ற வர்த்தக நாமமாக Xiaomi அமைந்துள்ளது. தொழில்நுட்ப ரீதியில் மேம்பட்ட அலைபேசி எனும் வகையில், Xiaomi சகாயமானதுடன், இலங்கையின் ஸ்மார்ட் ஃபோன் விரும்பிகளின் அனுபவத்துக்கு சிறந்த விருந்தாகவும் அமைந்திருக்கும்” என்றார்.
11 minute ago
17 minute ago
46 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
17 minute ago
46 minute ago
55 minute ago