Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 செப்டெம்பர் 27 , பி.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாடிக்கையாளருக்கு புத்துருவாக்கம் மற்றும் கவர்ச்சிகரமான நிதித்தீர்வுகளை வழங்கிவரும் சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் பினான்ஸ் பிஎல்சி (CDB) நிறுவனமானது தற்போது நாட்டின் வளர்ந்து வரும் இஸ்லாமிய நிதிச் சேவைகளை வழங்குவதில் புகழ்பெற்ற வர்த்தக குறியீடாக திகழ்கிறது.
தனிச்சிறப்பு மிக்க வங்கி வகைமைகள் குறித்த ஆழமான புரிதல் மற்றும் வளர்ச்சியடைந்து வரும் சனத்தொகை காரணமாக கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் CDB நிறுவனம் பரந்துபட்ட இஸ்லாமிய நிதித்தீர்வுகளை வழங்கும் நோக்கில CDB மீஸான் ஐ ஸ்தாபித்திருந்தது.
CDB மீஸான் நிறுவனம் நாடுமுழுவதும் உள்ள 69 CDB கிளைகளின் ஊடாக தனிநபர், வர்த்தகம் மற்றும் கூட்டாண்மை நிறுவனத் தேவைகளுக்கு பொருத்தமான தீர்வுகளை வழங்கி வருகிறது.
CDB மீஸான் நிறுவனத்தின் இஸ்லாமிய நிதிச் செயல்பாடுகள் பிரிவின் பிரதி முகாமையாளர் ஷப்னி, வாடிக்கையாளர் நம்பிக்கை எனும் வாக்குறுதியுடன், இஸ்லாமிய வங்கியியலின் கொள்கைகளைக் கடைபிடித்து நிதிச்சேவைகளை வழங்கி வருவதாக வலியுறுத்தினார் CDB மீஸான் திட்டங்கள் என்பன நவீனத்துவத்துடன் இணைந்த பாரம்பரியப் பெறுமதிகளை ஒன்றிணைத்திருப்பதுடன், உயர்ந்த ஒழுக்க நெறிகள் கடைப்பிடித்து வரப்படுகின்றன. ஷரியாவின் இஸ்லாமிய நிதித்தீர்வுகளில் வாகனங்கள் மற்றும் வர்த்தகங்களுக்கான முதாராபா சேமிப்புகள் மற்றும் வைப்புகள், இஜரஹா (லீசிங்) மற்றும் முராபா வசதிகள் போன்ற திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
CDB மீஸான் செயல்பாடுகள் இலங்கையின் ஷரியா அறிஞர் குழுவினால் மேற்பார்வை செய்யப்படுகின்றன. முதாராபா சேமிப்புகள் மற்றும் வைப்புகள் ஆகியவற்றின் முதலீட்டுத் தெரிவுகள் மிகவும் கவர்ச்சிகரமானவை. வழிகாட்டலுக்கமைய இலாப பங்கீட்டு தவணை வைப்புத் தெரிவாக முதாராபா வைப்பு உள்ளதுடன், முதிர்வு காலத்தில் முன்னர் தீர்மானிக்கப்பட்ட விகிதத்திற்கமைய வாடிக்கையாளர் மற்றும் CDB ஆகியவற்றுக்கிடையே இலாபம் பங்கிட்டு வழங்கும் திட்டமாகும்.
36 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
2 hours ago
3 hours ago